வாலி, கண்ணதாசன், வைரமுத்து யாரு பெஸ்ட்? பிரபலம் சொல்ற பதில் இதுதான்!

by sankaran v |
kannadasan vairamuthu vaali
X

kannadasan vairamuthu vaali

கண்ணதாசனைத் தமிழ் சினிமா உலகம் மட்டும் இல்லாமல் இலக்கியத்திலும் அவரைக் காணலாம். அவர் ஒரு கவியரசர். அவருடைய எண்ணங்கள் எல்லாமே ரசிக்கும் வகையில் இருக்கும். அவர் தமிழ்சினிமாவுக்குப் பல தத்துவப்பாடல்களையும், காதல் ரசம் சொட்டும் காவியப் பாடல்களையும் கொடுத்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் பெரும்பாலும் கவியரசர் தான் பாடல் எழுதுவார்.

கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் நூல் தொகுப்பை வெளியிட்டு ஆன்மிக சிந்தனையாளர்களின் மனதிலும் ஆழமாக இடம் பிடித்தார். வாலிபக்கவிஞர் வாலியோ எக்காலத்திலும் இளைஞர்களைக் கவரும் வகையில் பாடல் எழுதுவதில் வல்லவர். அதனால்தான் வாலிபக்கவிஞர் ஆனார்.

80களில் வைரமுத்துவின் ஆளுமை தமிழ்சினிமா பாடல்களில் தெறிக்க விட்டது. நிழல்கள் படத்தில் வந்த இது ஒரு பொன்மாலைப் பொழுது தான் அவரது முதல் பாடல். அவருடைய வரிகள் மிகவும் எளிமையாக பாமர மக்களையும் சேரும் விதத்தில் இருந்தது. இதை ரசிகர்களும் ரொம்ப வே விரும்பினர். தமிழ் பட பாடல்கள் மட்டும் இல்லாமல் கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் என பல நூல்களையும் எழுதியுள்ளார்.

வாலிபக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் வாலி. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பலருக்கும் சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்துள்ளார். அதே நேரம் இவரைக் காட்டிலும் கவியரசர் கண்ணதாசனுக்கும், கவிப்பேரரசர் வைரமுத்துவுக்கும் தான் அதிக மவுசு. அது ஏன்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

இந்த ஒப்பீட்டுல இருந்து கவியரசர் கண்ணதாசனை வெளியே எடுத்துருங்க. ஏன்னா இன்னைக்கு கவிஞர்னாலே அது கண்ணதாசன்தான்னு பலரும் சொல்றாங்க. வாலி, வைரமுத்துவை ஒப்பிடும்போது இரண்டு பேருமே திறமைசாலிகள். இந்த ரெண்டு பேருல வைரமுத்துவுக்கு பப்ளிக் ரிலேஷன்ஸ் கொஞ்சம் அதிகம்.

Next Story