Cinema News
ஆர்யாவா? சூர்யாவா? இல்ல நம்ம சுள்ளான் தனுஷா? அட செம விஷயமால இருக்கு?
தமிழ் சினிமாவில் படங்கள் வசூலை குவிப்பது போல விருதுகளுக்கும் போட்டிகள் பலமாக இருக்கும். அந்த வகையில் இன்று மாலை தேசிய விருது அறிவிப்பு வர இருக்கும் நிலையில் தமிழில் இருந்து சில படங்கள் விருது பட்டியலுக்கான நாமினியில் இருக்கிறது.
ஆர்யா நடிப்பில் வெளியான சார்பேட்டா பரம்பரை, சூர்யாவின் ஜெய்பீம், தனுஷின் கர்ணன், சிம்புவின் மாநாடு படங்கள் இந்த போட்டியில் இருக்கிறது. இதில் மாநகரம் படம் நல்ல வெற்றியினை பெற்றால் கூட மற்ற மூன்று படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது.
இதையும் படிங்க : சிட்டி 3.0 ஆக மாறிய கார்த்தி! கமெண்ட் கொடுக்கிறது யாருனு தெரியுமா? எதுக்கு இந்த வேண்டாத வேலை?
68வது தேசிய விருது விழாவில் சூரரைப்போற்று படத்துக்கும், சூர்யாவுக்கும் தேசிய விருது கிடைத்தது. அதைப்போன்றே தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் ஜெய்பீமுக்கே தேசிய விருது கிடைக்கலாம் என்ற தகவலும் இணையத்தில் கசிந்து இருக்கிறது. அப்படத்தில் துணை நாயகனாக நடித்த மணிகண்டன் தன்னுடைய நடிப்பில் மிகச்சிறந்த பாராட்டுக்களை ஜெய்பீம் படத்துக்காக வாங்கினார். இதனால் அவருக்கும் கூட விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா பல வருடங்களுக்கு பிறகு சிறப்பான நடிப்பினை வெளிபடுத்தி இருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் இப்படத்திற்காக உடலை வறுத்தி நடித்ததும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படம் ஓடிடியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம். பலருக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரும் கதையாகவே அமைந்து இருந்தது. தனுஷ் தன்னுடைய நடிப்பால் இப்படத்தில் மிரட்டி இருப்பார். கடந்தமுறை அசுரனுக்கு கிடைக்க வேண்டிய விருது மிஸ்ஸாகியதை இந்த கர்ணன் படத்தில் பிடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க : உலகநாயகனு சொல்லிட்டு உள்ளூர் நாயகன் சம்பளத்தை கூட கொடுக்கலடா – ‘இந்தியன்2’வில் பரிதாப நிலையில் கமல்
இந்த பட்டியலில் சிம்புவின் மாநகரம் படமும் இடம்பெற்றுள்ளது. டைம்லூப் எனச் சொல்லப்படும் சயின் பிக்ஸனாக இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. பல வருடங்களுக்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி வசூலை குவித்தது. தெலுங்கில் புஷ்பா, இந்தியில் 83, சூர்யவம்சி உள்ளிட்ட படங்களும் இந்த போட்டி பட்டியலில் இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. சிறந்த இயக்குனராக மாரி செல்வராஜ் அல்லது ஞானவேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு விருது கிடைக்கலாம் என நம்பப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு விருது அறிவிப்புகள் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.