தக் லைஃப் படத்தில் ரியல் வில்லன் அவரா? நம்பவே முடியலையே!

Thug life
Thuglife: மணிரத்னம், கமல், சிம்பு ஆகியோரின் கிளாசிக் கூட்டணியில் உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பர்ஸ்ட் சிங்கிள் ஜிங்குச்சா என்று வெளியாகி ரசிகர்களை ஜங்குச்சா என்று ஆட்டம் போட வைத்தது. கமலும், சிம்புவும் இந்தப் பாடலுக்கு அருமையாக நடனம் ஆடியிருப்பார்கள். பாடலும் மிகச்சிறப்பாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று டிரெண்டிங் ஆனது.
அடுத்த சிங்கிள் மே 7 ம் தேதியும், தொடர்ந்து டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மே 16ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்தப் படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து படத்திற்கான புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் படத்தின் சேட்டிலைட் உரிமை யாருக்குன்னு தெரியுமா?
தக்லைஃப் படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அதை எந்த தனியார் டிவி சேனலுக்குக் கொடுக்கப் போறாங்கன்னு இன்னும் முடிவாகல.

தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, திரிஷா, சான்யா மல்கோத்ரா, அசோக்செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், வடிவுக்கரசி, பகவதி பெருமாள், சின்னி ஜெயந்த், வையாபுரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் தான் கேங்ஸ்டர்ஸ் என்றும் சொல்லப்படுகிறது.
கமலின் மகனாக சிம்பு வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது கமலின் கழுத்திலேயே கை வைத்து சிம்பு சண்டை போடும் காட்சிகள் எல்லாம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படின்னா உண்மையான வில்லன் சிம்புவாகத்தான் இருப்பாரோ? எது எப்படியோ படத்தின் மீதான ஹைப்பை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்கிறார்கள். அடுத்த அப்டேட்டுக்காக வெயிட் பண்ணித்தான் பார்ப்போமே.