விஜயின் கடைசி நாயகி இவர் தானா.. தளபதி69 திரைப்படத்தில் மீண்டும் அந்த நடிகையா?
Thalapathy69: விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி69 திரைப்படத்தின் அடுக்கடுக்கான அப்டேட்கள் தொடர்ச்சியாக ரிலீஸாகி வருகிறது. கிட்டத்தட்ட இயக்குனர் முடிவாகிவிட்ட நிலையில் நாயகிகள் தேர்வும் தற்போது தொடங்கி விட்டதாம்.
அரசியலுக்கு எண்ட்ரியாக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய சினிமா கேரியரின் கடைசி பக்கங்களில் இருக்கிறார். வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படத்தினை முடித்துவிட்டு இருக்கும் இடைவேளையில் தளபதி69 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இளையராஜாவிடம் தேவா பாட்ட பாடி மெட்டு கேட்ட இயக்குனர்!.. என்னாச்சி தெரியுமா…
இப்படத்தின் இயக்குனர் வேட்டையே தீவிரமாக நடைபெற்றது. தெலுங்கில் பிரபல நிறுவனமான டிவிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் விஜயிற்கு அதிகபட்சமாக 250 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். இதுவே கோலிவுட் ஹீரோகளுக்கான முதல் அதிகம் சம்பளம் எனக் கூறப்படுகிறது.
கடைசி படமாக உருவாகும் தளபதி69 அதிகபட்சமாக அரசியல்சார்ந்த படமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதை சரியாக கையாளும் ஒரு இயக்குனரையே விஜய் தொடர்ச்சியாக சல்லடை போட்டு தேடிவந்தார். இந்த பட்டியலில் நிறைய முன்னணி இயக்குனர்களின் பெயர் அடிப்பட்டது.
ஆனால் தற்போது அதன் முடிவுகள் ஏறக்குறைய ரிலீஸாகிவிட்டது. சதுரங்க வேட்டை, நேர் கொண்ட பார்வை, தீரன் உள்ளிட்ட சமூகம் சார்ந்த அரசியலை சொன்ன ஹெச்.வினோத் தான் தற்போது விஜயின் சாய்ஸாக மாறி இருக்கிறார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இளையராஜாவின் 1000மாவது படத்திற்கு புதுப்பாடலாசிரியர்… ஏன்னு தெரியுமா?
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். தற்போது இப்படத்தின் நாயகி தேடல் தொடங்கிவிட்டதாம். திரிஷா, சமந்தா, ஆலியாபட் அல்லது மிருணாள் தாகூருடன் பேச்சுவார்த்தையை படக்குழு தொடங்கிவிட்டதாம். இதில் ஏற்கனவே திரிஷா மற்றும் சமந்தா விஜயுடன் நடித்து உள்ளனர். இதனால் புதிய நாயகி யாரும் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தளபதியின் 69 திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்ய இருக்கும் நடிகைக்கு அதிகபட்சமாக 10 கோடி வரை சம்பளமாக பேசப்பட இருக்கிறதாம். விரைவில் இதற்கு முடிவெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ தகவலுடன் படக்குழு அறிவிக்கும் என கோலிவுட் வட்டாரத்திலிருந்து கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அம்மா சொன்னதால் மியூசிக் போட்ட இளையராஜா!.. இசைஞானிக்கு இவ்வளவு தாய்ப்பாசமா?!..