யாருங்க விஜய் சேதுபதி? சீக்கிரம் புரிஞ்சிப்பீங்க!… வைரலாகும் கார்த்திக் சுப்புராஜ் போஸ்ட்!… ஜோசியம் தெரிஞ்சிருக்குமோ!

Vijay Sethupathi: கூட்டத்தில் நின்று நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி இன்று தன்னுடைய கேரியரையே மாற்றும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் அவர் சினிமாவின் மீது இருந்த காதல் தான். அப்படி விஜய் சேதுபதி மீது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வைத்த நம்பிக்கை குறித்த போஸ்ட் தற்போது ஆச்சரியத்தை  கிளப்பி இருக்கிறது.

கூத்து பட்டறையில் கணக்கராக கோலிவுட் பக்கம் வந்தவர் விஜய் சேதுபதி. நாளைய இயக்குனர் என்ற ஷார்ட் பிலிம் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் நிறைய படைப்புகளில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். அப்போதே இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்ததாம்.

இதையும் படிங்க: நடிகருக்கு அந்த பழக்கமே இல்லையாம்!… ஆனா படத்துக்காக என்ன செஞ்சாரு தெரியுமா?

இதை வைத்து சினிமாவில் நடிக்க தொடங்கினார் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை, லீ, நான் மகான் அல்ல மற்றும் வெண்ணிலா கபடிக்குழு படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார். அதை தொடர்ந்து அவரை ஹீரோவாக வைத்து தென்மேற்கு பருவக்காற்று படத்தினை எடுத்தார் சீனு ராமசாமி. 

முதல் படம் பெரிய ரீச் கொடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படங்கள் சின்ன பட்ஜெட் என்றாலும் செம ஹிட் கொடுத்து விஜய் சேதுபதியை ஹீரோ அங்கீகாரத்தினை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூது கவ்வும். அப்படத்தில் நடுத்திர வயது ஆளாக நடித்தும் ஹிட் அடித்தார்.

இதையும் படிங்க: செம நக்கல்யா உனக்கு!.. மீண்டும் விஜய்யை வான்ட்டட்டா வம்புக்கு இழுத்த மீசை ராஜேந்திரன்!..

அங்கு தொடங்கிய அவர் வளர்ச்சி பாலிவுட் வரை சென்றது. சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது கத்ரீனா கைஃப்வுடன் மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். ஒரே வருடத்தில் 6 படம் வரை நடித்து ஆச்சரியம் கொடுத்தவர். ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி சமீபகாலமாக விஜய், கமல், ரஜினி என மாபெரும் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தும் வருகிறார்.

ஆனாலும் இனி நான் வில்லனாக நடிக்க போவதில்லை என அதிரடியாக தெரிவித்து இருந்தார். அப்படி இருக்க 10 வருடத்துக்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். அதில் தென் மேற்கு பருவக்காற்று படம் நாளை ரிலீஸ் ஆகிறது. விஜய் சேதுபதியை திரையில் பார்க்க ஆவலாக இருக்கேன் எனக் குறிப்பிட்டு இருப்பார். 

இதையும் படிங்க: ஆபிஸ் மூடிய விஷயத்தை சொல்ல முடியாமல் திணறும் கோபி!… மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாரோ!

அதில் ரசிகர் ஒருவர் யார் விஜய் சேதுபதி எனக் கேள்வி எழுப்பி இருப்பார். சீக்கிரம் நீங்க தெரிஞ்சிப்பீங்க என பதில் கொடுத்து இருப்பார். அவர் அன்று வைத்த நம்பிக்கையை காப்பாத்தி விட்டார். விஜய் சேதுபதியின் வளர்ச்சியில் கார்த்திக் சுப்புராஜுக்கு பெரிய பங்கு இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago