வாரிசு vs துணிவு போட்டியில் யார் ஜெயிச்சது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டிங்க..!

Published on: December 22, 2023
---Advertisement---

Varisu vs Thunivu: தமிழ் சினிமாவில் பல வருடம் கழித்து விஜய் மற்றும் அஜித்தின் மோதலில் தான் இந்த வருடம் தொடங்கியது. அதில் ரசிகர்களுக்கு செம போட்டி இருந்தது. படங்களை கொண்டாடி தீர்த்தனர். இதில் உண்மையான வெற்றி யாருக்கு என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் ரஜினி, கமலுக்கு பின்னர் அடுத்த தலைமுறை ராஜாக்களாக வலம் வருவது விஜய் மற்றும் அஜித் தான். அவர்கள் படம் என்றாலே ரசிகர்கள் செம குஷியாகி விடுவார்கள். ஒருவர் படம் வந்தாலே இப்படி என்றால் இருவர் படமும் ஒரே நாளில் வந்தால் கொண்டாட்டம் வேற லெவலில் தானே இருக்கும்.

இதையும் படிங்க: பிரசாந்தின் இந்த நிலைமைக்கு காரணமே சத்யராஜ்தான்! நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த தியாகராஜன்

அப்படி ஒரு நிகழ்வுடன் தான் இந்த வருட பொங்கல் ஆரம்பித்தது. விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு இரண்டும் ரிலீஸ் ஆகியது. சோஷியல் மீடியாவில் சண்டையும் தொடங்கியது. அத்தனை அலப்பறை செய்தனர். இதில் வாரிசை விட துணிவுக்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாகவும் சர்ச்சைகள் கிளம்பியது. இரண்டு படத்துக்குமே சில கோடிகள் தான் வித்தியாசம்.

அப்படி பார்க்கும் போது வசூல் ரீதியாக துணிவு படத்தினை விட வாரிசு அதிகமாக வசூலித்து கொடுத்தது. ஆனால், லாபம் சம்பாரித்து கொடுத்தது என்னவோ துணிவு படம் தானாம். இதுக்கு காரணமாக சதவீத கணக்கு, அட்வான்ஸ் கொடுத்து படத்தினை ஓட்டியதை சொல்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள். இதனால்

இதையும் படிங்க: எம்மா ஏய்..! விஜயா மாதிரி ஒரு மாமியார் யாருக்கும் வரக்கூடாதுடா யப்பா..! ப்ளான் போடுற வயசப்பாரு..!

கிட்டத்தட்ட போட்டியில் இரண்டு படமுமே வெற்றி என்பது தான் உண்மை. இந்த படத்தினை தொடர்ந்து லியோவை முடித்துவிட்டு விஜய் தற்போது தளபதி68ல் பிஸியாக இருக்கிறார். ஆனால் துணிவுக்கு பின்னர் விடாமுயற்சியின் படப்பிடிப்பையே அஜித் இப்போது தான் தொடங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.