Cinema History
மோகன், ராமராஜன் இதுல யாரு செகண்ட் இன்னிங்ஸ்ல கெத்து?
80களில் மைக்மோகன், ராமராஜன் என இருவர் நடித்த படங்களும் செம மாஸாக இருந்தன. அந்த வகையில் இருவரது படங்களிலும் பாடல்கள் சக்கை போடு போட்டன.
மக்கள் நாயகன் என்று போற்றப்பட்ட ராமராஜனுக்கு மண்ணுக்கேத்த பொண்ணு, நம்ம ஊரு நல்ல ஊரு, செண்பகமே, செண்பகமே, எங்க ஊரு காவல்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பாட்டுக்கு நான் அடிமை, கரகாட்டக்காரன் என பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
Also read: 90 வயசு கிழவியா இருந்தாலும் சரி… நைட் கதவைத் தட்றவங்க தான் அங்கே இருக்காங்க..!
மோகன் நெஞ்சத்தைக் கிள்ளாதே, ரெட்டைவால் குருவி, சகாதேவன் மகாதேவன், விதி, பயணங்கள் முடிவதில்லை, தென்றலே என்னைத் தொடு, மௌனராகம், நூறாவது நாள், கிளிஞ்சல்கள் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.
ராமராஜன், மோகன் இருவருமே தற்போது செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளனர். ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் கடைசியாக செகண்ட் இன்னிங்ஸில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு படம் வரவேற்பைப் பெறவில்லை.
அதே நேரம் மோகன் நடித்த ஹரா படம் செகண்ட் இன்னிங்ஸில் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் அவர் தற்போது நடித்து வரும் கோட் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்றே தெரிகிறது.
ராமராஜன், மோகன் என இருவரும் தற்போது தமிழ்த்திரை உலகில் செகண்ட் இன்னிங்ஸில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்கன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் தான் இது.
Also read: சிவாஜி, கமல், ரஜினி கூட நடிச்சு கிடைக்காத மரியாதை… விஜய் கூட நடிச்சு கிடைச்சது! யாருப்பா அது?
இரண்டு பேருமே தேருவாங்க. அதுல எந்த சந்தேகமுமே இல்ல. இவங்கள்ல மோகனுக்கு இன்னும் கூடுதல் வாய்ப்பு இருக்கு. ஏன்னா இப்போ அவரு நடிச்சிருக்குறது விஜயோட கோட் படத்துல.
அதுல அவரோட கேரக்டர்ஸ், வாய்ஸ் எல்லாமே கேட்கும்போது ஆச்சரியமா இருக்கு. இந்தப் படம் வெளியான பிறகு பல பட வாய்ப்புகள் அவருக்கு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.