இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு சுமாரான வருடம் என்றே சொல்லலாம். ஏனெனில் சொல்லிக் கொள்ளும் படி பெரிய அளவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வசூலை அள்ளவில்லை. மாறாக வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த படங்களும் இளம் ஹீரோக்களின் படங்கள்தான்.
ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் படங்களுக்கு அதிகளவு முதலீட்டை போட, கடைசியில் அது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்தன. உதாரணமாக தக் லைஃப் படத்தை எடுத்துக் கொண்டால் 200லிருண்டுஹ் 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அந்தப் படம் பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அந்தப் படம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
அதே போல் அஜித் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்த திரைப்படம் விடாமுயற்சி . அந்தப் படம் 200 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது. படம் வெளியாகி 6 நாள்களில் 118 கோடிக்கு மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் படம் குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கே திருப்தி அளிக்கவில்லை. இப்படி பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது.
ஆனால் வளர்ந்து வரும் ஹீரோக்களான பிரதீப் ரெங்கநாதன், ரியோ ராஜ், துருவ் விக்ரம் என இவர்களுக்கு இந்த வருடம் அமோகமான வருடம் என்றே சொல்லலாம். பிரதீப் ரெங்க நாதன் நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியானது. ஒன்று டிராகன் மற்றொன்று டியூட் திரைப்படம். இந்த இரண்டு படங்களுமே குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபம் பார்த்த திரைப்படங்கள்.

அதை போல துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரியளவில் பேசப்பட்டது. ஆரம்பத்தில் துருவ் விக்ரம் மீது மக்களுக்கு வேறு மாதிரியான பார்வை இருந்தது. ஆனால் பைசன் திரைப்படம் வெளியான பிறகுதான் விக்ரமை மிஞ்சி விட்டாரே என்று நிரூபித்தார். விக்ரமை விட இரண்டு மடங்கு தன்னுடைய உழைப்பை அந்தப் படத்திற்காக போட்டிருக்கிறார்.
இவர்கள் வரிசையில் ரியோ ராஜும் இணைந்துள்ளார். அவர் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸுக்கு மிகவும் பிடித்தமான படமாக மாறியது ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம். அந்தப் படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டில் ஏதோ ஒரு வகையில் நல்ல படங்களையும் பார்த்தோம் என்று ரசிகர்கள் கூறினால் இவர்களின் படங்களாகத்தான் இருக்கும்.இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு சுமாரான வருடம் என்றே சொல்லலாம்.
ஏனெனில் சொல்லிக் கொள்ளும் படி பெரிய அளவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வசூலை அள்ளவில்லை. மாறாக வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த படங்களும் இளம் ஹீரோக்களின் படங்கள்தான்.
