இத செஞ்சீங்களாயா யாராவது? கலைஞர் 100 விழாவிற்கு அஜித், விஜய் வராததற்கான காரணத்தை போட்டுடைத்த பிரபலம்

by Rohini |
vijay
X

vijay

Vijay - Ajith: தமிழ் சினிமாவில் இருபெரும் தூண்களாக ரஜினி - கமலுக்கு அடுத்த படியாக வளர்ந்து நிற்பது விஜயும் அஜித்தும். இருவரும் ஒன்றாக சம காலத்தில் சினிமாவில் பயணிக்க தொடங்கியவர்கள். இன்றுவரை சமமான வெற்றி தோல்விகளை பார்த்து வருகிறார்கள்.

எத்தனையோ முன்னணி நடிகர்கள் இருந்தாலும் ரஜினி - கமலுக்கு இருக்கும் அந்த மாஸ் அடுத்ததாக விஜய்க்கும் அஜித்துக்கும்தான் இருந்து வருகிறது. தொழில்ரீதியாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அடடா! இப்படி ஓபனா கேட்டா நான் எப்படி பதில் சொல்லுவேன்? பிரதீப் கேள்வியால் திணறிய பூர்ணிமா!..

எண்ணிலடங்கா ரசிகர்களையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவிற்கு இருவருக்குமே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது. அஜித்தை பற்றி தெரிந்தும் மரியாதைக்காக அழைப்பிதழை கொடுத்திருக்கிறோம் என்று நடிகர் சங்கத்தில் இருந்து கூறியிருந்தார்கள்.

ஆனால் விஜய் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சென்னையில் இருந்தும் விஜய் வரவில்லை. ஒரு பக்கம் அஜித்தும் சென்னை வந்துவிட்டதாகவே சில வதந்திகளும் வந்தன. ஆனால் இருவரும் ஏன் வரவில்லை என்று வலைப்பேச்சு அந்தனன் தன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஆமா அவன்லாம் ஒரு ஆளு! கலைஞர் 100 விழாவில் அசிங்கப்பட்ட வடிவேலு!..

அதாவது விழாவிற்கான அழைப்பிதழ் பிரம்மாண்டமாக அடிக்கப்பட்டு அதில் ரஜினி, கமல் பெயரையும் போட்டு அவர்களுக்குண்டான மரியாதையை கொடுத்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்த படியாக இமயமாக வளர்ந்து வருபவர்கள் அஜித், விஜய். அவர்கள் பெயரையும் சேர்த்து போட்டிருந்தால் ஒரு வேளை அதற்கு மரியாதை கொடுத்தாலாவது விஜய் வந்திருப்பார். ஆனால் அஜித் வந்திருப்பாரா என்று தெரியவில்லை. இதை செய்ய தவறிவிட்டார்கள் என வலைப்பேசு அந்தனன் கூறினார்.

Next Story