அஜித்தை கமலுக்கு பிடிக்காமல் போனதற்கு இதான் காரணமா... வாய் பேச்சால் உலக நாயகனே ஒதுங்கிய பின்னணி...

Kamal_Ajith
தமிழ் சினிமாவின் 90ஸின் பிரபல நடிகர் என்றால் அது அஜித்தும் விஜயும் தான். ஒரு சில சர்ச்சைகளால் தங்களுக்கு பிடித்த நடிகர்களையே இவர்கள் மாற்றிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதிகம் மோதிக்கொண்ட ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான். எப்போதுமே ஒருவரை ஒருவர் ஓவராக திட்டிக்கொண்டு இருப்பர். இவர்களை அடக்க தல மற்றும் தளபதி விரும்பவில்லையா எனத் தெரியவில்லை. ஏனெனில், அவர்களே சில காலம் அப்படித்தான் இருந்தார்கள்.

Vijay_Ajith
தந்தையின் மூலம் அறிமுகப்படுத்தட்ட விஜய் ஒரு பக்கம் வளர்ந்து வந்த நிலையில், தனியாக அஜித்தும் அதே மார்க்கெட் வளர்ச்சியில் இருந்தார். அப்போது, தளபதி விஜயும், தல அஜித்தும் அவரவர் படங்களில் இருவரையும் தாக்கி கொண்ட சம்பவம் எல்லாம் ரசிகர்கள் அறிந்ததே. இது முதலில் தொடக்கி வைத்தவர் விஜய் தான். தன்னுடைய புதிய கீதை படத்தில் வில்லனை பார்த்து உன் தல, வாலு எல்லாத்தையும் கூட்டிட்டு வா எனப் பேசி இருப்பார்.
இதையும் படிங்க: அஜித்துக்கு விஜய்க்கும் இருந்த அந்த இடைவெளி!..எப்படி சரியானது?..காலங்கடந்த ரகசியத்தை பகிர்ந்த SAC!..
அப்போது தான் அஜித்தை ரசிகர்கள் தல என கூப்பிட தொடங்கி இருந்தனர். அதை தொடர்ந்து, அஜித் தனது ஜனா படத்தில் விஜயின் திருமலை படத்தினை வைத்து கிண்டல் செய்திருப்பார். இதற்கு அடுத்து விஜயும், அஜித்தும் ஒரு டயலாக் வைத்து இருவரையும் சாடிக்கொண்டே வந்தனர்.

Kamal_Ajith
ஒரு கட்டத்தில் கடுப்பான அஜித் தனது அட்டகாசம் படத்தில் உனக்கென்ன பாடல் மூலம் கடுமையாக விஜயை சாடினார். இதற்கு பதிலடியாக விஜய் தனது சச்சின் படத்தில் அஜித்தை கலாய்க்கும் படி சில காட்சிகளை வைத்து ஜினுஜினுக்கு ஜின் சச்சின் எனத் தொடங்கும் சச்சின் பாடலில் நடித்திருப்பார்.
இந்த சமயத்தில் தான் அஜித் எல்லா பேட்டிகளுமே சர்ச்சைகளை கிளப்பியது. அப்போது நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என அவர் பேசியதால் நடிகர் கமலே கடுப்பானாராம். அதனால் அஜித்தை கமலுக்கு பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது.

Rajini_Ajith
இதையறிந்த ரஜினிகாந்த், அஜித்தை கூப்பிட்டு அவருக்கு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அந்த சமயத்தில் பில்லா ரீமேக் வாய்ப்பையும் அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தார். அதை தொடர்ந்து அஜித்தின் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது.
இந்த பக்கம் தனது ஆதரவை விஜயிற்கு கொடுக்க தொடங்கினார் கமல்ஹாசன். விஜயின் பல படங்களுக்கு அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். இப்படி சில சர்ச்சையால் அஜித் மற்றும் விஜய் தங்களுக்கு பிடித்த நடிகர்களையே மாற்றிக்கொண்டதெல்லாம் நடந்திருக்கிறது.