Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் மூன்று கேரக்டர்களில் நடித்து வருகிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒரு அஜித் நல்லவராகவும் மற்ற இரு அஜித் எதிர்மறையான கேரக்டர்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித்தை பொறுத்த வரைக்கும் ஹீரோவாக நடிப்பதை விட நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதில் தான் அதிக ஆர்வமும் காட்டி வருகிறார்.
அதை தான் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். அஜித்தின் மார்க்கெட் எப்பொழுதெல்லாம் குறைகிறதோ அந்த சமயத்தில் அவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர் நெகட்டிவ் கேரக்டராக தான் இருந்திருக்கிறது. மங்காத்தா திரைப்படத்திற்கு முன்பு வரை அவருடைய படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. அதனால் அந்தப் படத்தில் ஒரு மோசமான வில்லனாக யாரும் எதிர்பார்க்காத ஒரு அஜித்தை நம்மால் பார்க்க முடிந்தது.
இதையும் படிங்க: இதெல்லாம் என்னால முடியாது!.. பேச மறுத்த சிவாஜி!. அசால்ட் செய்த டி.எம்.எஸ்!.. அட அந்த பாட்டா!..
அந்த படம் எப்படிப்பட்ட ஒரு வரவேற்பை பெற்றது? எந்த அளவு அஜித்தை கொண்டாடினார்கள் என அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாமல் நெகடிவ் கேரக்டர்களில் நடித்த படங்கள் எல்லாமே அஜித்தின் கரியரில் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாகவே அமைந்திருக்கின்ற. ஆரம்பத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கத்தான் அஜித் ஆசைப்பட்டார். அதற்கு பூஸ்ட் கொடுக்கும் விதமாக அமைந்தது தான் காதல் கோட்டை.
அதன்பிறகு காதல் மன்னன். ஆனால் இப்படியே போனால் நமக்கு இந்த மாதிரி ஒரு கேரக்டர் தான் என முத்திரை குத்தி விடுவார்கள் என உல்லாசம் என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் பிரதிபலித்தார். உல்லாசம் திரைப்படத்திலும் நெகட்டிவ் ஷேடில் தான் நடித்தார். இருந்தாலும் அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு அவருக்கு அமைந்த திரைப்படம் வாலி.
இதையும் படிங்க: நண்பன் செய்த லீலை!.. ரிலீசுக்கு முன்பே ரேடியோவில் வந்த எஸ்.பி.பாடல்!.. எம்.எஸ்.வி செய்ததுதான் ஹைலைட்..
அந்தப் படத்தில் தம்பி மனைவியை எப்படியாவது அடையத் துடிக்கும் ஒரு அண்ணனின் கதாபாத்திரத்தில் வில்லத்தனமான கேரக்டரில் நடித்தார் அஜித் .வாலி திரைப்படம் தான் அஜித்துக்கான நெகட்டிவ் ரோலுக்கு ஒரு ஸ்ட்ராங்கான பேஸ் கொடுத்த திரைப்படம். இந்த படத்திற்கு பிறகு அமர்க்களம் திரைப்படத்தில் ஒரு ரவுடியாக நடித்திருப்பார். இது ரிலீசான சமயத்தில் அன்றைய காலகட்டத்தில் ஆடியன்சை மிகவும் கவர்ந்த திரைப்படமாக அமைந்தது.
குறிப்பாக பெண் ரசிகைகளை அதிகமாக ஈர்த்தார் அஜித். கடைசியாக தீனா படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகுதான் தன்னுடைய ரசிகர்களை முழுவதுமாக கட்டமைத்துக் கொண்டார் அஜித். இப்படி வில்லனாக நடிக்கிறோம் .அதை ரசிகர்கள் ஏற்பார்களா ஏற்க மாட்டார்களா என்பதை எல்லாம் பற்றி அவர் கவலைப்படவில்லை.
இதையும் படிங்க: என்னதான் உருண்டாளும் புரண்டாளும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்! நாட்டாமை உங்களுக்கா இந்த நிலைமை?
ஏனெனில் ரசிகர்கள் சினிமாவை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். தான் எப்படி நடித்தாலும் தன்னுடைய இமேஜ் மட்டும் மாறவே மாறாது என்பதில் ரசிகர்கள் நம்பி இருந்தனர் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்திருந்தார் அஜித். இதைப்போல அட்டகாசம் திரைப்படத்திலும் தன் அம்மாவையே பழிவாங்கும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார் அஜித்.
அதன் பிறகு வரலாறு திரைப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடிக்க அதில் மூத்த மகன் கேரக்டரில் நடித்திருக்கும் அஜித் தன் அப்பாவை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என துடிக்கும் ஒரு நெகட்டிவ் ஷேடில் தான் நடித்திருப்பார். இப்படி நெகட்டிவ் ஷேடில் நடித்த அஜித்தின் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன .இப்போது அந்த வரிசையில் குட் பேட் அக்லி திரைப்படமும் அமைந்திருக்கின்றது. இது எந்த மாதிரியான ஒரு வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: என்னதான் உருண்டாளும் புரண்டாளும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்! நாட்டாமை உங்களுக்கா இந்த நிலைமை?
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…