More
Categories: Cinema News latest news

80களில் விட்டுப்போன உறவு!.. கமலை வைத்து ஏவிஎம் நிறுவனம் படம் பண்ணாத காரணம்?..

தமிழ் சினிமாவில் பாரம்பரியமிக்க பட நிறுவனமாக இருந்தது ஏவிஎம் நிறுவனம் தான். ஆரம்பகாலங்களில் தயாரிப்பு பணியிலேயே இல்லாத ஏவிஎம் நிறுவனம் ஒரு கட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை தயாரித்து வரிசையாக வெளியிட்டது.

இதன் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துப் போக வேண்டும் என மெய்யப்பச்செட்டியார் விரும்பினார். அதாவது சிவாஜி, எம்ஜிஆருக்கு அடுத்து இருக்கும் தலைமுறைகளை வைத்து படம் பண்ண வேண்டும் என மெய்யப்பச்செட்டியார் விரும்பினார்.

Advertising
Advertising

kamal1

இந்த ஆசையில் இருக்கும் போதே 1979 ஆம் ஆண்டு மெய்யப்பச்செட்டியார் இறந்து போக அவரது மகன்கள் மெய்யப்பச்செட்டியாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என விரும்பினர். அதனால் எஸ்.பி,முத்துராமனிடம் ரஜினி, கமலை வைத்து படம் பண்ண வேண்டும் என கூறியிருக்கின்றனர். அதுவரை ரஜினியும் கமலும் ஒன்றாக இணைந்து நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆண்டில் தான் இருவரும் பிரிந்து தனித்தனியாக நடிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தனர்.

அதனாலேயே முதலில் ரஜினியை வைத்து படம் எடுக்கலாம் என்று ‘முரட்டுக்காளை’ படத்தை தயாரித்தனர். படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். மதுரையில் 150 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அதனையடுத்து மீண்டும் ரஜினியை வைத்து ‘போக்கிரி ராஜா’ படத்தை தயாரித்தனர்.

போக்கிரி ராஜா படமும் 148 நாள்கள் ஓடி வெற்றிப் பெற்றது. அதன் பிறகு கமலை வைத்து ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தை தயாரித்தது. அந்தப் படமும் மாஸ் வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து ‘பாயும் புலி’ ரஜினியை வைத்து தயாரித்து வெற்றிக் கொடி நாட்டினர் ஏவிஎம்.

kamal2

மீண்டும் கமலை வைத்து ‘தூங்காத தம்பி தூங்காதே’ படம் 250 நாள்கள் ஓடி எல்லா சென்டர்களிலும் ஓடி சாதனை படைத்தது. கமலை தொடர்ந்து ரஜினிக்கு ‘தங்கமகன்’ ‘ நல்லவனுக்கு நல்லவன்’ போன்ற படங்கள் ஹிட் கொடுத்து வந்த நிலையில் கமலை வைத்து ‘உயர்ந்த உள்ளம்’ என்ற படத்தை தயாரித்தனர்.

அது தான் இவர்கள் வைத்து எடுத்த படங்களிலேயே ஏவிஎம் சந்தித்த முதல் தோல்வி படம். அதுவும் கமல் படத்தின் மூலம் தோல்வியை தழுவியது. ஆனால் அதை ஈடுகட்டினார் ரஜினி. ‘மிஸ்டர் பரத்’ என்ற மாபெரும் வெற்றியை கொடுத்தார். ஆனாலும் அதை மீண்டும் கமல் இறக்கினார். அவர் நடித்த ‘பேர் சொல்லும் பிள்ளை’ படமும் மீண்டும் ஏவிஎம்மிற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

kamal3

இந்த தோல்விக்கும் பிறகு எழ முடியாமல் இருந்த ஏவிஎம் நிறுவனத்தை ‘மனிதன்’ என்ற படத்தின் மூலம் தூக்கி நிறுத்தினார் ரஜினி. அதே நேரம் கமல் நடித்த ‘ நாயகன்’ படமும் வேறொரு நிறுவனம் மூலம் வெளியானது. இரு  படங்களும் ஒரே நேரத்தில் மோதின. ஆனாலும் சமமான வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க : அரண்மனை – 4 படத்தில் இருந்து விலகும் விஜய்சேதுபதி!.. அவருக்கு பதில் நடிக்க போகும் நடிகர் யார் தெரியுமா?..

இப்படி தொடர்ந்து வெற்றிகளை குவித்த ஏவிஎம் கமல் படத்தால் தோல்வியை சந்தித்ததால் 1987 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இணையவே இல்லை. அதன் பின் வந்த விஜய் , அஜித், விக்ரம் இவர்களுடம் படம் தயாரித்த நிறுவனம் கமலுடன் இணையவே இல்லை என்பது தான் உண்மை. இந்த செய்தி இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Published by
Rohini

Recent Posts