நடிகர்களின் வெளிநாட்டு பயணத்தின் பின்னணி.! எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரையில்...,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என நாம் கொண்டாடும் பல நடிகர்கள் தங்கள் விடுமுறையையோ, தங்கள் பிள்ளைகளின் படிப்பையையோ, தங்களது மருத்துவ சிகிச்சைகளையோ வெளிநாடுகளில் தான் மேற்கொள்வர். பெரும்பாலும் பல தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்புகள் வரும்.
குறிப்பாக பிரபலங்கள் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொள்வதற்கு பலர் ஏன் இந்தியாவில் அந்த அளவுக்கு மருத்துவ சேவை இல்லையா? வெளிநாடுகளிலிருந்து கூட இந்தியாவில் வந்து மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்கின்றனர்.பின்னர் ஏன் இந்த பிரபலங்கள் மட்டும் வெளிநாடு செல்கின்றனர் என்ற கேள்வி எழுப்புவர்.
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கூட தனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தார். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தனது உடல் பிரச்சினை காரணமாக சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை செய்து கொண்டு நாடு திரும்பினார். தளபதி விஜய் அஜித் போன்றோர் தங்களது விடுமுறைகளை வெளிநாடுகளில் கழிக்கின்றனர்.
இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால், பலர் கூறும் ஒரே தகவல் இங்கே மருத்துவ சேவைகளை செய்யலாம். சிகிச்சைகளை எடுத்து கொள்ளலாம். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. இங்கு நட்சத்திரங்களை ஏதோ கடவுளை பார்ப்பது போல பல ரசிகர்கள் நினைத்துக் கொள்கின்றனர்.
ஆதலால், தங்கள் ஆதர்சன நாயகனுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடி விடுகின்றனர். இதன் காரணமாகவே எம்ஜிஆருக்கு அப்போது தமிழகத்தில் சிகிச்சை மேற்கொள்ள திறன் இருந்தும், வெளிநாடு கொண்டு செல்லப்பட்டார். அவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது என்பதால் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. அதேபோல்தான் ரஜினியின் சிகிச்சைக்கும் நடந்தது.
இதையும் படியுங்களேன் - எனக்காக அங்க காத்ரீனா கைஃப் காத்திருக்காங்க., இயக்குனரை கடுப்பேத்திய மக்கள் செல்வன்.!
விஜய், அஜித் போன்றோருக்கும் இதே நிலைமைதான். இவர்கள் பிள்ளைகள் இங்குள்ள பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ படித்தால் அதுவே பெரிய சிக்கலாகிவிடும். அவர்களை பார்ப்பதற்காகவே பலர் கூடிவிடுவர். இதனை தவிர்த்து தங்கள் மகன், மகள் வெளிநாடுகளில் சாதாரண மாணவர்களை போல் படிக்க வேண்டும் என்று வெளிநாடு அனுப்பி விடுகின்றனர் என்கிறது சினிமா வட்டாரம்.
உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் எதுவும் அவர்கள் தரப்பு நியாயமே. தங்களது பிள்ளைகளும் சாதாரண மாணவர்கள் போல நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. அதே போல தங்களது மருத்துவ சிகிச்சை மற்றவர்களுக்கு அசௌகரியமாக இருந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் வெளிநாடு செல்கின்றனர் என்கிறது ஒரு தரப்பு.