17 வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட ஷோபா... மண்ணில் புதைந்த ரகசியம் இதுதான்!..

by sankaran v |
Shoba BM
X

Shoba BM

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை ஷோபா. இவரது இயற்பெயர் மகாலட்சுமி மேனன். நடிகைகளில் இளம் வயதிலேயே இறந்தவரும் இவர் தான். 80களில் தமிழ்ப்பட உலகில் கோலோச்சிய நடிகை. அதனால் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. இவர் தனது 3வது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

1978ல் பாலசந்தர் இயக்கத்தில் நிழல் நிஜமாகிறது படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து முள்ளும் மலரும், கோலங்கள், மூடுபனி என அவர் நடித்த படங்கள் எல்லாமே முத்திரை பதித்தன. நடிப்பில் இவர் ஒரு ராட்சசி என்றே சொல்லலாம். 1978ல் வெளியான பசி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

MM Shoba

MM Shoba

இதற்காகவே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தனது 16வது வயதிலேயே இயக்குனர் பாலுமகேந்திராவைத் திருமணம் செய்து கொண்டார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அவர்களுக்குள் ஒரு நெருக்கமான காதல் இருந்தது தான் இதற்குக் காரணம்.

தேசிய விருது பெற்றிருந்த ஷோபாவுக்கு பாராட்டு விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அந்த நாளில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முழுமையாக வாழவில்லை. அப்புறம் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

முள்ளும் மலரும் படத்தில் கேமராமேனாக பணியாற்றியவர் பாலுமகேந்திரா. அப்போது தான் இருவருக்கும் காதல் அரும்பியது. ஷோபாவின் அழகில் மயங்கி விட்டாராம் பாலுமகேந்திரா. இந்தக் காதல் இருவருக்குள்ளும் மலரத் தொடங்கியது.

shoba2

shoba2

பசி படத்தின் இயக்குனர் துரை தேசிய விருது விழாவை பெரிதாகக் கொண்டாட முடிவு செய்தார். ஆனால் அதே நேரம் ஷோபாவின் தற்கொலை என்றதும் பலரும் பேரதிர்ச்சி அடைந்தனர். பாலுமகேந்திராவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்ததாம். திருமணத்திற்குப் பிறகும் பாலுமகேந்திரா முதல் மனைவியுடன் இருந்ததுதான் இந்தத் தற்கொலைக்குக் காரணம் என அப்போது செய்திகள் வெளிவந்தன. அப்போது பாலுமகேந்திரா எங்கள் இருவருக்கும் உள்ள உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும்.

அவள் தற்கொலைக்கு யார் காரணம் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அதை நான் சொல்லப் போவது இல்லை என்று அப்போது கூறினாராம். ஆனால் அந்த ரகசியத்தை தனது காலம் முடியும் வரையும் கூறாமலேயே இந்த மண்ணை விட்டுப் பிரிந்து விட்டார் பாலுமகேந்திரா.

Next Story