Cinema History
புதுப்பாடகர்களுக்கு ‘நோ’ சொன்ன இளையராஜா!.. ஜானகிக்கு மட்டும் அதிக வாய்ப்பு கொடுத்தது ஏன்?..
இளையராஜாவிடம் ஒருமுறை பாடகி ஜானகிக்கு மட்டும் அதிக வாய்ப்புகளைக் கொடுத்தது ஏன்னு கேட்டாங்களாம். அதற்கு இசைஞானி சொன்ன பதில் இதுதான்.
திரையிசைப் பாடல்களை இப்படித்தான் பாடணும்னு ஒரு வரைமுறைக்குள் தெள்ளத் தெளிவாகப் பாடுவது யார் என்றால் அது ஜானகி தான். ஒரு பாட்டை மனசுக்குள்ளே இப்படி நினைச்சி இப்படித் தான் பாடணும்னு சொன்னா அதை அப்படியே பாடிடுவாங்க. அவங்க பாடுனா எந்த கரெக்ஷனும் தேவையே இல்ல. ஒரு பாட்டு பாடும்போது மைக்கை எப்படி பிடிக்கணும்னு கூட கரெக்டா பண்ணுவாங்க. மைக்கை எங்க வச்சி பாடணும். மூச்சு விடும்போது மைக்கை எங்கே எடுக்கணும்கறதை எல்லாம் தெளிவா செய்வாங்களாம் ஜானகி. இதை இளையராஜாவே சொல்கிறார்.
இதையும் படிங்க… தோழியின் மீது கை போட்ட லிங்குசாமி!.. பழி தீர்த்த உலக நாயகன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!…
மகளிர் மட்டும் படத்துல ‘காளை மாடு ஒண்ணு கறவை மாடு மூணு’ பாடலை 3 ஹீரோயின்களுக்கு 3 வாய்ஸ்ல பாடி அசத்தியவர் தான் ஜானகி. அந்த மாதிரி அசாத்திய திறமை உள்ளவர்களைத் தான் இளையராஜா பயன்படுத்துவாராம். சாதாரணமாக திறமை உள்ளவர்களை எல்லாம் இளையராஜா பயன்படுத்துவதில்லை. சில பாடகர்கள் வேறு ஒரு இசை அமைப்பாளரிடம் பாடியிருக்கலாம்.
ஆனால் அவர்கள் இளையராஜாவிடம் பாட முடியாது. காரணம் அவருக்கு ஏற்ற வகையில் குரல் இருந்தால் மட்டுமே இளையராஜா ஒத்துக்கொள்வாராம். அதனால் இளையராஜா மீது புதியவர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுவதுண்டு. அந்தக் காலத்தில் புதியவர்களைப் பாட வைக்கும்போது நிறைய ரீ டேக் வாங்கும்.
இதையும் படிங்க… முகத்தை காட்ட மறுக்கும் நயன்தாரா!.. ஒரே பேக்கிரவுண்ட் போட்டோக்களா போட்டுத் தாக்குறாரே!..
அதனால் நேரம் அதிகமாகி கால்ஷீட் பிரச்சனை வரும். அப்போது டெக்னாலஜியும் கிடையாது. மியூசிக் போடும்போதே பாட வைக்க வேண்டும். அதனால் இளையராஜா நல்லா பாடும் பாடகர்களுக்கு மட்டுமே திரும்ப திரும்ப வாய்ப்புகள் வழங்கினார். ஆனால் இப்போதுள்ள காலத்தில் அப்படி அல்ல. பாடலைத் தனியாகப் பாடச் சொல்வார்கள். எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதன்பிறகு அதனுடன் இசையை சேர்த்துக் கொள்வார்கள். ஏ.ஆர்.ரகுமான் காலத்தில் இந்த டெக்னாலஜி எல்லாம் வந்து விட்டது.
ஆனால் அதற்கு முன்பே வந்த கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசை மேதைகளுக்கு இது போன்ற விமர்சனங்கள் எழுந்ததில்லை.