Connect with us
Kalki

Cinema News

கல்கியில் கமல் நடிக்க சம்மதிச்சதுக்கு இதுதான் காரணமா? என்ன ஒரு புத்திசாலித்தனம்?!

கல்கி 2898 AD படத்தில் கமலின் கதாபாத்திரம் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கமலின் கெட்டப் சில வினாடிகளே காட்டப்பட்டது.

பிராஸ்தடிக் மேக்கப்புடன் இவரது கதாபாத்திரம் பார்க்கவே மிரட்டலாக இருந்தது. அவ்வை சண்முகி, இந்தியன், தசாவதாரம் என 3 கெட்டப்புகளையும் கலந்து அடித்தது மாதிரி இருந்தது.

இதையும் படிங்க… பழச மறக்காத வைகைப்புயல்.. டி.ராஜேந்தர் பற்றி வடிவேலு என்ன சொல்லியிருக்காரு பாருங்க

இந்தப் படத்தை வைஜெயந்தி மூவீஸ் 600 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. நாக் அஸ்வின் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் தினமும் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டிரெய்லரே ஹாலிவுட் லெவலில் உள்ளதாலும், சயின்ஸ் பிக்சர் படம் என்பதாலும் படத்தின் ஹைப் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தப் படத்தில் கமல் நடிக்க என்ன காரணம் என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

கமல் எப்படிப்பட்ட நடிகர் என்றும் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பார் என்றும் அனைவருக்கும் தெரியும். அவருக்கென முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் இருந்தால் அவர் நிச்சயம் நடித்திருக்க மாட்டார். அதனால வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை கமல்ஹாசனுக்கு கல்கியில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கமலுக்கு இந்தப் படத்தில் 12 நிமிடங்கள் மட்டுமே காட்சி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் 2ம் பாகத்தில் ஒன்றரை மணி நேரம் வருகிறார் என்கிறார்கள். இந்தப் படத்தில் ‘கலி’ என்ற கேரக்டரில் கமல் வில்லன் அவதாரம் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க… ரஜினி கொடுத்த கிஃப்ட வாங்கலயே! அர்ஜூன் வீட்டு வரவேற்பில் நடந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ

இந்தப் படத்தில் அவரது முட்டைக் கண்கள் பார்க்கவே மிரட்டும் வகையில் உள்ளது. புதுசா ஒரு பிரபஞ்சம் உருவாகி இருக்கு என்று அவர் சொல்லும்போது நமக்குள் அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் பிறக்கிறது. இந்தப் படத்தின் பிரம்மாண்டம் இன்னொரு பாகுபலி போன்ற வெற்றியைத் தருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top