Connect with us
Gemini Ganesan

Cinema History

ஜெமினிகணேசனை ‘சாம்பார்’னு ஏன் சொன்னாங்க தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

தமிழ்த்திரை உலகில் ளகாதல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் ஜெமினிகணேசன். அவரைத் தமிழ்திரையுலகில் ஒரு காலகட்டத்தில் சாம்பார் என்றே அழைத்தனர். அது வேடிக்கையாக இருந்தாலும் என்ன காரணம் என்று பார்ப்போமா…

எம்ஜிஆர் தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதன்படி நடித்து வந்தார். அது எம்ஜிஆர் பார்முலா ஆனது. இதன்படி அவர் எதிரிகளைக் கூட நேசிப்பார். ஒரு போதும் தண்டிப்பது இல்லை.

இதையும் படிங்க… மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா?!.. இப்படி ஆகிப்போச்சே!…

அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ரசிகர்கள் மத்தியில் தன் நடிப்புத் திறனுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றார். அவர்களுக்கு அடுத்த படியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜெமினிகணேசன் தான்.

இவர் பொதுவாக காதல் சார்ந்த படங்களில் தான் நடித்தார். அந்த காலகட்டங்களில் அவரை காஸனோவா என்று அழைத்தனர். அவர் 3 முறை திருமணம் செய்துள்ளார். அவருக்குப் பல தோழிகளும் உண்டு. அந்த நேரத்தில் அவர் தமிழ்சினிமாவில் தனக்கான பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என இருபெரும் நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர்களில் எம்ஜிஆருடன் முகராசி படத்தில் மட்டும் நடித்துள்ளார். சிவாஜியுடன் பாசமலர், கந்தன் கருணை, சொர்க்கம், பார்த்தால் பசி தீரும், கப்பலோட்டிய தமிழன், திருவருட் செல்வர், சரஸ்வதி சபதம் உள்பட பல படங்களில் இணைந்த நடித்தார்.

Avvai shunmughi

Avvai shunmughi

அப்போது இவர் என்ன சாம்பாரா என ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர். அதாவது தென்னிந்தியாவில் சாம்பார் மிகவும் பிரபலமான ஒரு உணவு. அறுசுவை உணவுகளில் முதலாவதாக இடம்பெறுவது சாம்பார் தான். அது போல சாப்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது.

அதுபோல் பல்சுவைகளைத் தரும் வகையில் இவர் நடித்ததால் அந்தப் படங்கள் ரசிகர்களுக்கு ஒரு சாம்பார் போல மாறிவிட்டது. அந்த வகையில் ஜெமினிகணேசனும் தன்னால் முடியாத சவாலான வேடங்களிலும் எளிதாக நடித்து அசத்தினார். கமல் படமான அவ்வை சண்முகியில் இவரது கதாபாத்திரம் களைகட்டும்.

அந்தக் கேரக்டரில் நடிகர் திலகம் கூட தான் இதில் நடித்தால் சிறப்பாக இருக்காது. ஜெமினிகணேசன் தான் பொருத்தமானவர் என்று சர்டிபிகேட் கொடுத்தாராம். இது பார்க்க ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும் இன்னொரு புறம் எம்ஜிஆர், சிவாஜிக்குக் கூட கிடைக்காத இந்தப் பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top