90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் ஆங்கர் விஜய் சாரதி! மீண்டும் மீடியா பக்கம் வராததற்கு இதுதான் காரணமா?

Published on: June 19, 2024
sarathy
---Advertisement---

Vijay Sarathy: 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளராக இருந்தவர் விஜய் சாரதி. சன் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக 90 காலகட்டத்தில் இருந்தது நீங்கள் கேட்டவை. அந்த நிகழ்ச்சியை பல வருடங்கள் தொகுத்து வழங்கியவர் விஜய் சாரதி. அதுமட்டுமல்லாமல் பல முக்கிய பிரபலங்களை பேட்டியும் எடுத்து இருக்கிறார்.

ஆனால் இப்போது அவரை மீடியா பக்கம் பார்க்க முடியவில்லை. அதற்கு காரணம் சன் டிவிக்கும் தனக்கும் எந்த ஒரு கிளாஸ் இல்லை என்றாலும் எல்லாம் ஒரே பேட்டர்னில் போய்க்கொண்டிருப்பதால் நான் விலகி விட்டேன். அது மட்டுமல்லாமல் மேலிடத்திலிருந்து என்னை அழைத்த நேரத்தில் அதை உதறி தள்ளி விட்டு ஸ்ரீலங்கா சென்று விட்டேன். அதனால் திரும்பவும் என்னை கூப்பிட மாட்டார்கள் என சன் டிவிக்கும் அவருக்கும் உண்டான தொடர்பை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் விஜய் சாரதி.

இதையும் படிங்க: நான் 5 லட்சமே பார்த்தது இல்ல… 15 லட்சமா? பாலசந்தருக்கே ‘ஷாக்’ கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

சன் லைப் என்ற சேனல் தொடங்குவதற்கு முதல் காரணமாக இருந்தது விஜய் சாரதிதானாம். அது மட்டும் அல்லாமல் சன் டிவியில் காலை நேரத்தில் ஒளிபரப்பப்படும் ஆலய வழிபாடு ராசிபலன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் காரணமாக அமைந்ததும் இவர்தானாம். முதலில் இந்த சேனலில் எம்.டியாக இருந்த ஒருவரிடம் இந்த ஐடியாவை விஜய் சாரதி சொன்ன போது.

அதற்கு அந்த எம்டி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் இந்த ஆலய வழிபாடு எல்லாம் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இருந்தாலும் இந்த ஐடியாவை கலாநிதி மாறன் இடம் சொல்ல ஒரு மாத காலம் விஜய் சாரதி சொன்னதைப் போல ஆலய வழிபாடு ராசிபலன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நான் பண்றனோ இல்லையோ.. நீ நல்லா பண்றே!.. உதயநிதியிடம் உருட்டிய விஜய்!….

சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு விஜய் சாரதியை அழைத்து மற்றும் அனைவரையும் வைத்து ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்திருக்கிறார் கலாநிதிமாறன். அப்போது காலையில் ஒளிபரப்பப்படும் ஆலய வழிபாடு ராசிபலன் இதில் யாரும் கை வைக்க வேண்டாம். நிகழ்ச்சி நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என சொல்லி விஜய் சாரதியை பாராட்டினாராம் .

இப்படி சன் டிவிக்கும் சன் லைஃப் சேனலுக்கும் இவரால் ஏகப்பட்ட பலன்கள் அடைந்திருக்கின்றன. விஜய் சாரதிக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தானாம். அதற்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்தால் போவீர்களா என கேட்டதற்கு கண்டிப்பாக என்னை கூப்பிட மாட்டார்கள். அது நடக்கவும் நடக்காது. ஆனால் எனக்கும் சன் டிவிக்கும் எந்த ஒரு கிளாஸ்ஸும் இல்லை. நானாகத்தான் வெளியே வந்து விட்டேன் எனக் கூறி இருக்கிறார் விஜய் சாரதி.

இதையும் படிங்க: வாசல் வரைக்கும் வந்த மகாலட்சுமியை திருப்பி அனுப்பிய நடிகர்! ‘மகாராஜா’ படத்தில் இவர் நடிக்க வேண்டியதா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.