ரசிகர்கள் வேணாம் 'காசு' தான் முக்கியம்... சூர்யாவை வறுக்கும் ரசிகர்கள்!

#image_title
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கங்குவா திரைப்படம் மீண்டும் ஒருமுறை தள்ளிப்போய் உள்ளது.
சூர்யா கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் கங்குவா. இதில் சூர்யா வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி அக்டோபர் 1௦-ம் தேதி ரிலீஸ் தேதி என அறிவித்து இருந்தனர்.
ஆனால் அதே தேதியில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாவதால் தற்போது கங்குவா தள்ளிப்போய் இருக்கிறது.
படம் தள்ளிப்போனதை விடவும் அதற்கு சூர்யா சொன்ன காரணம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரஜினி சார் மூத்தவர் அதனால் அவருக்கு வழிவிட்டு கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியினை தாங்கள் தள்ளி வைத்திருப்பதாக சூர்யா மிளகாய் அரைத்துள்ளார்.
ஒன்று படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் கிளாஷ் விட்டால் வசூல் குறைந்து விடும் என்றெண்ணி படத்தின் ரிலீஸ் தேதியினை மாற்றி வைத்திருக்க வேண்டும் என இதுகுறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சொன்ன தேதியில் படத்தை வெளியிடுவதற்கு துணிவில்லை என்றும் இதனால் தான் விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தினை பிடிக்க முடியாமல் சூர்யா திண்டாடுவதாகவும் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.