தொடர்ச்சியாக காணாமல் போகும் லைகா படத்தின் ஹார்ட்டிஸ்க்… அம்மணிய தப்பா பேசிட்டாங்களேயப்பா…!

by Akhilan |   ( Updated:2024-03-18 04:25:26  )
தொடர்ச்சியாக காணாமல் போகும் லைகா படத்தின் ஹார்ட்டிஸ்க்… அம்மணிய தப்பா பேசிட்டாங்களேயப்பா…!
X

Lyca Production: லால் சலாம் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம் என இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த அடடே விளக்கமே தற்போதைய சமூக வலைத்தளங்களின் வைரல் டாப்பிக்காக மாறி இருக்கும் நிலையில் மேலும் ஒரு சுவாரஸ்ய தகவலும் கசிந்து இருக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லால் சலாம். இப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் படம் பெரிய அளவில் பேசப்படும். ஒரு கட்டத்தில் தேசிய விருது வரை கிடைக்கும் என படக்குழு தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால் படம் ரிலீஸாகி மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க: கூச்சப்பட்ட நடிகை!. சம்பளத்தை கொடுத்து விரட்டிவிட்ட இயக்குனர்!.. காதலிக்க நேரமில்லை அப்டேட்!..

அதிலும் ரஜினி நடிப்பில் வெளியான இப்படம் இன்னமும் ஓடிடிக்கு விற்பனை செய்யப்படாமல் இருப்பது தான் மிகப்பெரிய அவலமாகி இருக்கிறது. இதற்கிடையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படத்தின் மிக முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தவறிவிட்டதாகவும், அதனால் எங்களிடம் இருந்த காட்சிகளை வைத்து படத்தை எடிட் செய்து முடித்ததாகவும் பேசி இருப்பார்.

அதுவே படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அவர் கூறியது மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில், சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் 430 ஷாட்கள் காணாமல் போனதாக பி.வாசு ஏற்கனவே தெரிவித்து இருப்பார். அதுப்போல, தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக், 2.ஓ படத்தின் ட்ரைலர் எல்லாமே லீக்காகவும் செய்தது. இந்த லிஸ்ட்டில் லால் சலாமின் 21 நாட்களின் ஷூட்டிங் காட்சிகள் எல்லாமே மிஸ்ஸானது.

இதையும் படிங்க: காலையில் ஐடி ஆபிஸ்.. மாலையில் டைரக்டர் வாசல்… கௌதம் வாசுதேவ் மேனனின் ஆரம்பகாலம் இவ்வளோ மோசமா?

இப்போது யோசிக்கும் போது பார்த்தால் இது எல்லாமே லைகா தயாரிப்பில் வெளியான திரைப்படங்கள் தான். இதனால் லைகா புரோடக்‌ஷனின் பாதுகாப்பு அவ்வளவு குறைபாடா இருக்கா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. புரோடக்‌ஷன் இவ்வளவு குளறுபடியா இருந்தால் எப்படி நஷ்டத்தினை சமாளிப்பார்கள் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஹார்ட் டிஸ்க் காணாமல் போவதாக சொல்லப்படுவது எல்லாம் உண்மை கிடையாது. படத்தின் தோல்வி சமாளிக்க தயாரிப்பு குழுவின் மீது போடப்படும் பழி தான். இந்த ஹார்ட் டிஸ்குகள் எனவும் சிலர் கிசுகிசுக்கின்றனர். உண்மை யாருக்குப்பா தெரியும்?

Next Story