ஜெமினியை தன்னுடன் நடிக்க வைக்க விரும்பாத எம்ஜிஆர்! இப்படிலாமா யோசிப்பாரு நம் பொன்மனச்செம்மல்?

MGR Gemini Ganesan: தமிழ் திரையுலகில் முடி சூடா மூவேந்தர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன். இவர்களில் மூவருக்குமே ஒரு அடைமொழி உண்டு. எம்ஜிஆரை வீரத் திலகம் என்றும் சிவாஜியை நடிகர் திலகம் என்றும் ஜெமினியை காதல் மன்னன் என்றும் அந்த காலங்களில் அழைத்து வந்தார்கள்.

அந்த அளவுக்கு அவர்களின் அடைமொழிக்கு ஏற்ப அவர்களின் கதாபாத்திரங்கள் படங்களில் வெளிப்படும். ஜெமினியை பொருத்தவரைக்கும் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஒரு காதல் ஹீரோவாகவே வலம் வந்தார். அதற்கேற்றார் போல் அந்த காலங்களில் பல நாயகிகளின் கனவு நாயகனாகவும் திகழ்ந்து வந்தார். இதில் எம்ஜிஆரும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த முகராசி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: கல்யாண நாளில் கலகம் செய்ய வரும் சத்யா… ஓவரா பேசும் மனோஜ்… வயித்தெரிச்சலா இருக்கே!

1966 ஆம் ஆண்டு வெளியான இந்த முகராசி திரைப்படத்தை திருமுகம் என்பவர் இயக்கியிருந்தார். இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடிக்க ஜெமினிகணேசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. எம்ஜிஆரை பொறுத்த வரைக்கும் அவருக்கு என ஒரு தனி கொள்கைகள் இருந்து வந்தன.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெமினியுடன் எம்ஜிஆர் இணைந்து நடிக்கவே இல்லை. அதற்கான காரணம் என்ன என விசாரித்த போது பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன்  ‘எம்ஜிஆரை பொறுத்தவரைக்கும் அந்த காலத்தில் தனக்கு இணையாக ஒரு நடிகர் பிரபலமானால் அவருடன் இணைந்து நடிப்பதை எம்ஜிஆர் தவிர்த்து விடுவார்’ எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இளையராஜாவை அவமானப்படுத்திய பாலச்சந்தர்!.. இருவரும் பிரிந்ததன் உண்மையான காரணம் இதுதான்!..

இதன் காரணமாகவே முகராசி திரைப்படத்திற்கு பிறகு ஜெமினியுடன் எம்ஜிஆர் இணைந்து நடிக்கவே இல்லை என சித்ரா லட்சுமணன் கூறினார். இது மட்டுமல்ல. எம்.ஜி.ஆரின் படங்களை பொறுத்தவரைக்கும் ஒரு தனி பாலிசி இருக்கும். அதற்குள் யாரும் உள்ளே குறுக்கே வராதவாறு எம்ஜிஆர் பார்த்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago