Connect with us
radha

Cinema History

கலைவாணரை சுடுவதற்கு பல நாளாக ஒத்திகை பார்த்த எம்.ஆர்.ராதா! அதிர்ச்சி பின்னணி

MR Radha NSK: எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினை பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம். எம்ஜிஆரை எம் ஆர் ராதா சுட்ட கதை ஒரு வரலாறு ஆகவே மாறி இருக்கிறது. ஆனால் எம்ஜிஆருக்கு முன்பே எம் ஆர் ராதாவின் டார்கெட் கலைவாணர்தான் என ராதாரவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கலைவாணரை சுடுவதற்காகத்தான் எம் ஆர் ராதா துப்பாக்கியை வாங்கினார் என்றும் ஒரு பேட்டியில் ராதாரவி கூறி இருந்தார்.

ஆனால் இதற்குப் பின்னணியில் என்ன நடந்தது என்பதை பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறுகிறார். எம்.ஆர். ராதாவின் புகழ் பெற்ற நாடகமான ரத்தக்கண்ணீர் நாடகத்திற்கு முன்பே இழந்த காதல் என்ற கதையை நாடகமாக்கினாராம் எம்ஆர் ராதா. அந்த நாடகத்தில் ஜெகதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம். அந்த நாடகம் ரத்தக்கண்ணீர் நாடகத்தைப் போல மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட நாடகமாம்.

இதையும் படிங்க: ஃபேன் மேட் வேண்டாம்!. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்ப வரும்?!. விடாமுயற்சியை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்…

அதனால் அதை படமாக்கும் முயற்சியில் கலைவாணர் இறங்க அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் படத்தில் எம் ஆர் ராதாவுக்கு பதில் கேபி காமாட்சி என்ற நடிகரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தாராம் கலைவாணர். இதைக் கேட்டதும் எம் ஆர் ராதாவுக்கு பெரும் அதிர்ச்சியாம் .அதிர்ச்சியுடன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம் எம் ஆர் ராதா.

படத்தில் எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் கலைவாணர் இப்படி செய்வது எம்.ஆர். ராதாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் இவரை சுட்டுவிடலாம் என நினைத்த எம் ஆர் ராதா உளுந்தூர்பேட்டையில் போய் ஒரு துப்பாக்கியை வாங்கி பல நாட்களாக எப்படி சுட வேண்டும் என ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாராம் எம் ஆர் ராதா .

இதை அறிந்த கலைவாணர் நாடாக அவையில் இருந்த எதார்த்தம் பொன்னுசாமி கலைவாணரிடம் போய் சொல்லி இருக்கிறார்.  ‘தயவு செய்து எம் ஆர் ராதா கண்ணில் மட்டும் பட்டு விடாதீர்கள்’ என சொல்ல அதையும் மீறி கலைவாணர் எம் ஆர் ராதா நாடகம் நடந்து கொண்டிருந்த கரூருக்கு சென்று அங்கு போய் ராதாவை பார்த்து இருக்கிறார்.

இதையும் படிங்க: முகமா முக்கியம்!.. அந்த ஷேப்பை பார்த்தே தூக்கத்தை தொலைங்க!.. இளைஞர்களை ஏங்கவிடும் தர்ஷா குப்தா!..

தங்களை பார்க்க கலைவாணர் வந்திருக்கிறார் என கேள்விப்பட்டதும் அதிர்ச்சியானாராம் எம் ஆர் ராதா. இருந்தாலும் கலைவாணர் மீது எப்போதுமே எம் ஆர் ராதாவுக்கு ஒரு மரியாதை இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவரை போய் சந்தித்து இருக்கிறார். ராதாவை பார்த்ததும் கலைவாணர்  ‘நான் ஏன் கேபி காமாட்சி என்ற நடிகரை அந்த படத்தில் நடிக்க வைத்தேன் தெரியுமா? ஒரு வேளை படத்தில் நடிக்கும் போதும் அவர் சரியாக நடிக்கவில்லை என்றால் அது சரியில்லை இது சரியில்லை என சொல்ல முடியும்.

ஆனால் உன்னிடம் அப்படி சொல்ல முடியுமா? உனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க எனக்கு யோக்கியம் இருக்கிறதா?’ எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் எம் ஆர் ராதாவுக்கு கண்ணில் இருந்து மளமளவென கண்ணீர் வர பார்த்துக் கொண்டே இருந்தாராம் கலைவாணர். பிறகு கலைவாணர்  ‘இதுக்குமேல் என்னை சுட நினைத்தால் சுடு’ என சொல்ல அதற்கு எம் ஆர் ராதா  ‘இதை வைத்து என்னை நானே சுட்டுக் கொள்ள வேண்டும்’ என சொன்னாராம். அதன் பிறகு ராதாவை அன்போடு கட்டியணைத்து கலைவாணர் அவருடைய ஆறுதலை கூறியிருக்கிறார். இதை சித்ரா லட்சுமணன் அவருடைய யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: எங்கே செல்லும் இந்த பாதை ஏகே!.. எந்த முயற்சியும் இல்லாமல் வந்த விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top