Categories: latest news

சூடுபிடிக்கும் நிவேதா பெத்துராஜ் விவகாரம்.. இப்போ எங்க போச்சு நடிகர் சங்கம்? பொங்கி எழும் பிரபலம்

Actress Nivetha pethuraj: கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகையாகவே திகழ்ந்து வந்தார். ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அஜித்தை போலவே இவரும் ஒரு கார் ரேஸர்.

ஏகப்பட்ட கார் பந்தயப் போட்டிகளில் பங்கு கொண்ட நிவேதா சில காலமாகவே சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது துபாயில் வசித்து வரும் நிவேதா பெத்துராஜை பற்றி சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது.

இதையும் படிங்க: ஸ்ருதியால் பல்ப் வாங்கிய விஜயா.. மனோஜுக்கும், ரோகினிக்கும் இந்த திருட்டு புத்தி போகாதா?

பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜுக்கு உதய நிதி ஸ்டாலின் துபாயில் 50 கோடி மதிப்புள்ள வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று தேவையில்லாமல் நிவேதா மீது பழி போட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் மட்டும் உதயநிதியும் நிவேதாவும் சேர்ந்து நடித்தார்கள். அதிலிருந்தே இவர்களை பற்றி சில சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருந்தன. ஆனால் சமீபகாலமாக 50 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மிகவும் டீசண்டாக நிவேதா ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: நா.முத்துக்குமார் மொத்த சம்பளத்தையும் எங்கிட்ட கொடுத்துட்டார்!. மனம் நெகிழும் தினந்தோறும் நாகராஜ்..

அதில் என்னைப்பற்றி தேவையில்லாத கருத்துக்களை பரப்பிவருகிறார்கள். இதனால் நானும் என் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். இனிமேலும் இப்படி செய்தி வெளியிடாதீர்கள்.சட்டப்பூர்வமாக இதை நான் எதிர்கொள்ள விரும்பவில்லை என நிவேதா கூறினார்.

இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி ‘இப்படி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது மிகவும் மோசமான செயல். த்ரிஷா மன்சூர் அலிகானுக்காக வரிந்து கட்டி இறங்கிய நடிகர் சங்கம் இந்த பிரச்சினைக்கு ஏன் வாயே திறக்க வில்லை? அப்போ பாகுபாடுதானே பார்க்கிறார்கள்?’ என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் அடம்பிடித்த ரசிகர்… கார்த்திக் செய்த அந்த சம்பவம்..!

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

6 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

8 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

14 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

15 hours ago