நாசருக்கும் ரஜினிக்கும் இடையில் எழுந்த பிரச்சினை!.. கமலுடன் நெருக்கம் காட்டுவதற்கு இதுதான் காரணமா?

by Rohini |   ( Updated:2023-05-18 06:19:31  )
rajini
X

rajini

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல். 80களின் காலகட்டத்தில் சினிமா இவர்களின் கையில் தான் இருந்தது. இருவருமே சினிமாவின் இருபெரும் துருவங்களாக சினிமாவை ஆட்சி செய்து கொண்டு வந்தனர்.

மேலும் இருவரின் படங்களும் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருந்த காலம் அது. இந்த நிலையில் நடிகர் நாசர் பற்றிய ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார். பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர்தான் நாசர்.

rajini1

rajini1

நாசரின் மூக்கை பார்த்தே அசந்தவர் பாலசந்தர். அதனால் அவரை தன் படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். நாசர்
சினிமாவில் ஓரளவு பிரபலமானதும் கமலின் பெரும்பாலான படங்களில் நாசரை பார்க்க முடிந்தது. கமலுக்கு பக்கபலமாக இருக்க கூடிய நடிகர் என்றே நாசரை கூறுவதும் உண்டு.

அந்த அளவுக்கு நாசருக்கும் கமலுக்கும் உள்ள நெருக்கம் அதிகம். அது எப்போது இருந்து ஆரம்பித்தது என்றால் ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில் நாசருக்கும் ரஜினிக்கும் ஒரு சிறிய க்ளாஷ் ஆனதாம். அதாவது ரஜினியை விட நாசர் கொஞ்சம் ஸ்கோர் செய்து விட்டாராம். அதனால் நாசர் சம்பந்தமான சில காட்சிகள் எடிட்டிங்கில் இருந்து தூக்கி விட்டார்களாம்.

rajini2

rajini2

அதனால் ரஜினிக்கும் நாசருக்கும் இடையே சிறு பிரச்சினை வந்ததாம். இதை பயன்படுத்திக் கொண்ட கமல் அதிலிருந்து தன் படங்களில் நாசரை இணைத்துக் கொண்டாராம். அவ்வைசண்முகி, விஸ்வரூபம், தேவர் மகன், போன்ற பெரும்பாலான படங்களில் நாசர் கமலுடன் இணைந்து நடித்திருப்பார். இதை செய்யாறு பாலு கூறினார்.

Next Story