சத்யராஜை எவனும் கேள்வி கேட்க முடியல! ரஜினியையே சொறிஞ்சுட்டு இருக்கீங்க - ஆவேசமாக பேசிய ஒய்.ஜி
ஏற்கெனவே ரஜினிக்கும் சத்யராஜுக்கு இடையில் யாருக்கும் தெரியாத ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. அது உண்மையா?பொய்யா என்று கூட தெரியவில்லை. ஆனால் சில பிரபலங்கள் சொல்லி மிஸ்டர் பாரத் படத்தில் நடந்த பிரச்சினைதான் அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய விரிசலை ஏற்படுத்தியது என்று கூறினார்கள்.
அதுமட்டுமில்லாமல் காவிரிக்காக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது அதில் பேசிய சத்யராஜ் மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசியிருந்தார். அதுவும் அவரின் சுய கவுரவத்திலேயே கைவைத்த மாதிரி பேசியிருந்தார்.
ஆனால் ரஜினி அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மேலும் ரஜினியின் படங்களில் சத்யராஜை நடிக்க அழைத்த போது சத்யராஜ் மறுத்துவிட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பிரச்சினை குறித்து சத்யராஜிடம் கேட்ட போது ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினி மட்டும்தான் என்று நெத்தியடி பதிலாக கூறினார்.
இதற்கு உடனே ஊடகங்கள் ரஜினியும் சத்யராஜும் ராசியாகி விட்டார்களா? என்று ஒரு செய்தியை கூறி வந்தது. இந்த நிலையில் பிரபல நடிகரான ஒய்.ஜியிடம் ரஜினியை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது.
இதையும் படிங்க : ‘கங்குவா’ பட வைப்! மிகப்பெரிய பட்ஜெட்டில் மற்றுமொரு புதிய படத்தில் சூர்யா – ஒன் லைன் கேட்டா ஆச்சரியப்படுவீங்க
ஜெய்லர் படம் முடிந்ததும் உடனே இமயமலை சென்று விட்டாரே ரஜினி? அதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்டனர். அதற்கு ஒய்.ஜி அது அவருடைய சொந்த விஷயம். அவர் இமயமலை போறது ஒன்னும் புதியதல்ல. என்னுடன் நடிக்கும் போதிலிருந்தே ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ரஜினி.
அது அவருடைய நம்பிக்கை. அதை பற்றி கேள்வி கேட்க எவனுக்கும் அருகதை இல்லை. சரி. ஆன்மீகத்தில் இப்படி இருக்கிறாரே என்று ரஜினியையே சொறிஞ்சுட்டு இருக்கீங்க. எத்தனை பேர் கடவுள் இல்லைனு சொல்லிட்டு அலையுறான். அவன யாரையாவது புடிச்சு கேள்வி கேட்டீங்களா? ஏனெனில் ரஜினியை பத்தி எழுதினால் உங்களுக்கு ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும்.
இதையும் படிங்க : உண்மையிலேயே நடிகையர் திலகம் 2 தான்! கதைக்காக ஒரு வார காலம் எங்க இருக்காங்க தெரியுமா?
ரஜினியை மாதிரியே சத்யராஜும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். என்னிடமே வந்து கடவுளை பற்றி அப்படி பேசுவார். அவரும் கடவுள் இல்லை என்று தானே சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஏன் அவரை போய் கேளுங்களேன், ஏன் ரஜினியையே வறுத்தெடுக்கிறீர்கள் என்று அந்தப் பேட்டியில் ஆவேசமாக பேசியிருந்தார்.