பிரகாஷ்ராஜின் முதல் மனைவி ஏன் மறுமணம் செய்யலனு தெரியுமா? விவாகரத்து ஆகியும் இப்படி ஒரு முடிவா?

Actor Prakashraj: தமிழ் சினிமாவில் பிரதான வில்லன் நடிகராக இருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ரகுவரனுக்கு அடுத்தபடியாக வில்லன் கதாபாத்திரத்தில் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் கட்டுக்குள் வைத்தவர் பிரகாஷ்ராஜ். இவருக்கும் இவருடைய முதல் மனைவியான நடிகை லலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.

இதில் பிரகாஷ்ராஜ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நடிகை லலிதா மனதில் உறுதி வேண்டும், மாப்பிள்ளை ,புலன்விசாரணை, புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல கவர்ச்சி நடிகை ஆன டிஸ்கோ சாந்தியின் தங்கை ஆவார். 1994 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட லலிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கூலி படத்தில் அந்த நடிகர் இல்லையாம்!.. பேன் இண்டியாவுக்கு வந்த ஆப்பு!.. அப்செட்டில் லோக்கி!…

இவர்கள் இருவரும் திருமணம் ஆகி பதினாறு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு தான் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திருமணத்திற்கு பிறகு லலிதா சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்தார். சமீப காலமாக தான் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்து youtube சேனலில் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இருவருக்கும் விவாகரத்து ஆன நிலையில் பிரகாஷ்ராஜ் மட்டும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் லலிதா இதுவரை அவருடைய இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். அதற்கான காரணம் என்ன என்பது சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: பாட்டு எல்லாமே சூப்பர் ஹிட்!. ஆனாலும் வாய்ப்பே இல்ல.. டி.எம்.எஸ் தொடர்ந்து பாடாத காரணம்!..

இதைப் பற்றி ஒரு சமயம் லலிதாவே ஒரு பேட்டியில் ‘நான் என்னுடைய திருமண வாழ்க்கையில் உண்மையாக இருந்தேன். விவாகரத்து ஆனாலும் அந்த ஒரு வாழ்க்கை சிறப்பானதாக அமைந்தது. அதை தவிர வேறு வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது’ என்பது போல கூறி இருக்கிறார். ஆக பிரகாஷ்ராஜ் உண்மையாக இல்லை என்பது மாதிரி சொல்லியிருக்கிறார் லலிதா. இதன் காரணமாகவே தான் லலிதா இரண்டாவதாக திருமணம் செய்யவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

 

Related Articles

Next Story