Categories: latest news

நேத்து வந்தவர்களுடன் ஆட்டம் போடும் ரஜினி.. அட்லீனா மட்டும் ஏன் ஓடி ஒதுங்குறாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி இப்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். அதற்கு காரணம் ஷாருக்கானை வைத்து அவர் எடுத்த ஜவான் திரைப்படம் தான். ராஜா ராணி படத்திற்கு பிறகு விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார் .

விஜய் வைத்து தெறி ,மெர்சல் ,பிகில் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இயக்குனராகவும் மாறினார். இவர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். நண்பன் பட சமயத்தில் தான் விஜய்யுடன் அறிமுகமானார் அட்லீ. 2014 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார் .

இதையும் படிங்க: அமரன்ல பாதி கூட கலெக்ஷனை எட்டாத கங்குவா… தனுஷால தப்பித்த சூர்யா!

முதல் படமே அபார வெற்றி அடைந்த படமாக மாறியது. அதனைத் தொடர்ந்து விஜய் படங்களை எடுத்து இன்னும் பல ஹீரோக்களுடன் சேர்ந்து பணிபுரிவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிகில் படத்திற்கு பிறகு அவர் பாலிவுட்டுக்கு ஷிப்ட் ஆகிவிட்டார். இந்த நிலையில் கார்த்திக் சுப்பாராஜ் ,நெல்சன் என அடுத்தடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுடன் சேர்ந்து பணிபுரியும் ரஜினிகாந்த் ஏன் அட்லீயுடன் மட்டும் சேர்ந்து படம் பண்ண வில்லை என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.

vijayatlee

இதற்கு வலைப்பேச்சு பிஸ்மி கூறிய பதில் இதோ .அட்லியுடன் ரஜினி படம் பண்ணாததற்கு காரணம் இரண்டு இருக்கின்றது. ஒன்று பிகில் படத்திற்கு பிறகு அவர் தமிழில் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கவே இல்லை. ஷாருக்கானை வைத்து மிகப் பிரம்மாண்டமாக ஜவான் படத்தை எடுத்து அந்த படமும் ஆயிரம் கோடி வசூலை பெற ஹிந்தியில் அனைவரின் கவனத்தை ஈர்த்த இயக்குனராக மாறினார்.

இதையும் படிங்க: வைரலாகும் நாகசைதன்யா- சோபிதா திருமண பத்திரிக்கை?!… இது உண்மைதானா!… ரசிகர்கள் குழப்பம்..!

அந்த படத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் சல்மான்கான் வைத்து ஒரு படம் எடுக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .இதன் காரணமாகவே தான் மும்பையிலேயே தனது காதல் மனைவியுடன் செட்டிலாகி இருக்கிறார் அட்லி. இன்னொரு காரணம் என்னவெனில் ரஜினியை பொறுத்த வரைக்கும் அவர் ஒரு இயக்குனருடன் பணிபுரிகிறார் என்றால் அந்த இயக்குனரின் கேரக்டர் எப்படி ,பழகுவதற்கு ஆள் எப்படி என முன்பே அறிந்து வைத்து கொள்வாராம். இதில் அட்லியின் கேரக்டர் பல பேருக்கு தெரிந்திருக்கும். அதனால் கூட ரஜினி அட்லியுடன் சேர்ந்து படம் பண்ணாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என வலைப்பேச்சு பிஸ்மி கூறுகிறார்.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

3 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

6 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago