நாக சைதன்யா 2-வது திருமணம்… சமந்தா என்ன சொல்லி இருக்காங்க பாருங்க!

Published on: December 5, 2024
samantha
---Advertisement---

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பொன்னியின் செல்வன் நாயகி சோபிதா துலிபாலாவை அவர் மணந்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு சமந்தாவை திருமணம் செய்த சைதன்யா அவரை விவாகரத்து செய்துவிட்டு சோபிதாவை மேரேஜ் செய்துள்ளார். இவர்கள் திருமணம் பேச்சுவார்த்தை ஆரம்பித்தவுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இருந்த சமந்தாவின் கடைசி புகைப்படத்தையும் சைதன்யா நீக்கி விட்டார்.

samantha1
samantha1

இதற்கு சமந்தா நேரடியாக எந்த பதிலும் கொடுக்கவில்லை என்றாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில், நீங்கள் அநாவசியமாக செலவழித்தது எந்த விஷயத்திற்கு? என கேட்டபோது என்னுடைய எக்ஸ்க்கு (நாக சைதன்யா) வாங்கிக்கொடுத்த பரிசு தான் என்று நெத்தியடியாக பேசியிருந்தார்.

இந்தநிலையில் தற்போது திருமணம் முடிந்தும் சமந்தா சும்மா இல்லை. தன்னுடைய இன்ஸ்டா அக்கவுண்டில் ஒரு பையன், பெண் இருவரும் குத்துச்சண்டை போடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

story
#image_title

அதில் அந்த பையன் ஆரம்பத்தில் பெண்ணை அடித்து காயப்படுத்துகிறான். என்றாலும் இறுதியில் அந்த பெண்தான் ஜெயிக்கிறார். இந்த வீடியோவை அவர் எதை நினைத்து பகிர்ந்தார் என்று தெரியவில்லை. ஆனாலும் நாக சைதன்யா திருமணத்தின் போது பகிர்ந்து இருப்பதால் அவர் சைதன்யாவைதான் குறிப்பிடுகிறார் என கூறப்படுகிறது.

எது எப்படியோ இனிமேலாவது சமந்தா தன்னுடைய வாழ்க்கையில் கவனம் செலுத்தினால் அதுவே போதும் என ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Pushpa2 Review: வேறலெவல் சம்பவம் பண்ணிய அல்லு அர்ஜூன்!.. புஷ்பா 2 டிவிட்டர் விமர்சனம்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.