More
Categories: Cinema News latest news

ரசிகர் மன்றமே வைத்துக் கொள்ளாத சிவக்குமார்!.. அதற்கு காரணமாக இருந்த எம்ஜிஆர் ரசிகர்கள்…

இயல்பாகவே ஓவியராக இருக்கும் நடிகர் சிவக்குமார் ஓவியப் பயிற்சிக்காக கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஒரு அறையில் தங்கி ஓவியப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராம். நடிப்பையும் தாண்டி இப்பொழுது ஒரு மேடைப்பேச்சாளராக உருவெடுத்திருக்கிறார். கம்பராமாயணம் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருந்த சிவக்குமார் திருக்குறளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இவர் முதன் முதலில் ‘காக்கும் கரங்கள்’ என்ற படத்தில் அறிமுகமானார். கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களான எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித் -விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். சினிமாவில் ஒரு ஒழுக்க நெறி தவறாத கண்ணியமான நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

Advertising
Advertising

sivakumar1

இவர் அனைத்து வகைகளிலும் எந்த பாத்திரத்தையும் நேர்த்தியுடன் கொண்டு செல்வதில் வல்லவர். இவர் நடித்த படங்களில் முக்கியமாக இவரின் நடிப்புத் திறனை அறிய ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘திருமால் பெருமை’,  ‘உயர்ந்த மனிதன்’, ‘ரோசாப்பூ ரவிக்கைக் காரி’ போன்ற படங்களின் மூலம் அறியலாம்.

ஆனால் இத்தனை பெருமைக்குரிய நடிகர் இதுவரைக்கும் தனக்கான ரசிகர் மன்றத்தை வைக்க விரும்பவில்லை. அதற்கான காரணத்தையும் ஒரு சமயம் கூறியிருக்கிறாராம். அதாவது சிவக்குமார் முதன் முதலில் கடவுளாக அவதாரம் எடுத்த நடித்த படம் ‘கந்தன் கருணை’திரைப்படம்.

sivakumar2

அந்தப் படத்தை பார்க்க தன் சொந்த ஊருக்கு சென்றாராம். அப்போது படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தாராம். கந்தன் கருணை படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சாணியால் அடிக்கப் பட்டிருந்ததாம். ஏனெனில் அந்தப் படம் வெளியான நாள் எம்ஜிஆர் குண்டடி பட்டு படுத்துக் கிடந்த சமயமாம்.

இதையும் படிங்க : ஒரு வேளை ஷாலினியா கூட இருக்கலாம்!.. அஜித்தின் திடீர்மாற்றத்தை பற்றி பேசிய பிரபல நடிகர்..

அதனால் அந்த கோபத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் செய்த செயல் தான் அது. அந்த சம்பவம் சிவக்குமாரை மிகவும் பாதித்திருக்கிறது. உடனே அதிலிருந்து ஒரு முடிவை எடுத்தாராம் சிவக்குமார். ‘இனிமேல் தான் எந்த நடிகரையும் சார்ந்து இருக்கப் போவதும் இல்லை, தனக்காக நடிகர் சங்கத்தையும் வைத்துக் கொள்ளப் போவதும் இல்லை’ என்ற முடிவை எடுத்தாராம். அதிலிருந்து இது நாள் வரைக்கும் அவருக்காக ரசிகர் மன்றமே இருந்ததில்லையாம். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts