உருகி உருகி காதலித்தவரை விட்டுப்பிரிந்த ஸ்ரீதேவி! இப்படி ஒரு கண்டீசனை போட்டா யாருதான் வாழ்வா?
தென்னிந்திய சினிமா உலகில் அப்பவே லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார். 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார் ஸ்ரீதேவி. முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
அதே 16 வயதினிலே ஹிந்தி ரீமேக் மூலமாகத்தான் ஹிந்தியிலும் தனது அறிமுகத்தை பதிவு செய்தார். ஆனால் தமிழில் ஓடிய அளவு ஹிந்தியில் அந்தப் படம் ஓடவில்லை. படு தோல்வி அடைந்தது. இருந்தாலும் ஹிந்தியிலும் ஒரு டாப் நடிகையாக வந்தார்.
இதையும் படிங்க : கொல பசியில் இருக்கும் தனுஷ்! மீண்டும் தீனி போடக் காத்திருக்கும் அந்த கில்லர் இயக்குனர்
கமல், ரஜினி இவர்களின் ஆஸ்தான நாயகியாக வலம் வந்தார். கமல் ஸ்ரீதேவி ஜோடியா? ரஜினி ஸ்ரீதேவி ஜோடியா? என்ற வகையில் போட்டியே வைக்கலாம். இருவருக்குமே ஒரு நல்ல ஜோடியாக திகழ்ந்தார் ஸ்ரீதேவி.
ஆனால் இவர் ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி என்பவரைத்தான் உருகி உருகி காதலித்தாராம். இருவரும் சேர்ந்து படங்களில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியிருக்கின்றனர். மூன்று வருடம் இருவரும் லிவிங் ரிலேஷன்சிப்பில் இருந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க :அந்தப் பட்டத்திற்கு தகுதியான ஆளே இல்லை! ‘சூப்பர் ஸ்டார்’ குறித்து நச் என பதிலடி கொடுத்த சத்யராஜ்
ஆனால் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்ததாம். இதனால் ஸ்ரீதேவி அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் வருமாறு கூறினாராம். ஆனால் மிதுன் சக்கரவர்த்தியோ ஸ்ரீதேவியை இரண்டாவது மனைவியாக சேர்த்துக் கொள்ள தயாராக இருந்தாரே தவிற முதல் மனைவியை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லையாம்.
இதன் காரணமாகத்தான் ஸ்ரீதேவி மிதுன் சக்கரவர்த்தியை விட்டு பிரிந்தாராம். ஆனால் அதன் வலி பல காலம் ஸ்ரீதேவிக்கு இருந்ததாக சொல்லப்படுகின்றது. சினிமாவில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகையின் வாழ்க்கையில் இப்படியும் ஒரு சோகக்கதை.