Cinema News
‘இந்தியன் 2’ ரிலீஸ் தேதியில் குழப்பமா? லைக்காவின் அமைதிக்கான காரணம் என்ன? தாத்தா வருவாரா?
Indian 2: கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன் 2. ஏழு வருடங்களைக் கடந்து இப்பொழுதுதான் இந்த படம் ரிலீஸ் ஆகப்போகின்றது. வருகிற 12-ஆம் தேதி படத்தின் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு. ஆனால் படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு தேதி இதுவரை வெளியாகவில்லை.
அதேபோல் இந்தியன் 2 படத்தை புரொமோட் செய்யும் போதும் ஒரு சில பத்திரிகைகளில் படத்தின் தேதியை மறைத்தும் ஒரு சில பத்திரிகைகளில் படத்தின் தேதியை வெளிப்படையாக அறிவித்தும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றதாம் லைக்கா நிறுவனம். அதற்கான காரணம் என்ன என்பதை விசாரித்த போது சில தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: எல்லா பாட்டுமே மொக்கதான்!. இப்படி ஏமாத்திட்டாரே யுவன்!.. வெங்கட்பிரபு உழைப்பெல்லாம் போச்சே!…
இன்று தான் இந்தியன் 2 படத்தை சென்சாருக்கு அனுப்பி இருக்கின்றதாம். சென்சார் அனுப்புவதற்கு முன்பே படத்தின் தேதியை அறிவித்துவிட்டால் அது சென்சார் போர்டுக்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து கொடுக்கும் ஒரு பிரஷர் என்று சொல்லப்படுகிறது. அதனால் சென்சார் முடிந்த பிறகு படத்தின் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடலாம் என தயாரிப்பு நிறுவனம் பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறதாம்.
இதே போல் தான் விஜயின் ஒரு படத்தின் தேதியை முன்பே அறிவித்துவிட்டு அதன் பிறகு சென்சாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் சென்சார் போர்டுக்கு படக்குழுவில் இருந்து பிரஷர் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி வரை இந்த பிரச்சனை சென்று சென்சார் போர்டுக்கு ஒரு தீராத வலியாய் மாறிவிட்டதாம்.
இதையும் படிங்க: என்னதான் லேடி சூப்பர் ஸ்டாரானாலும் பழச மறக்கலப்பா! ஆச்சரியப்பட வைத்த நயன்
அதே மாதிரியான ஒரு பிரச்சனை மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சென்சார் போடும் இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் லைக்கா நிறுவனம் இதுவரை இந்தியன் 2 படத்தின் தேதியை அறிவிக்காமலேயே இருக்கின்றதாம். ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் உட்பட திரை பிரபலங்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் .இந்த கால அரசியல் சூழலுக்கு ஏற்ப படத்தில் என்னென்ன அரசியல் இருக்க போகின்றன என்பதற்காக தான் இந்த எதிர்பார்ப்பு.