‘கல்கி’யில் டம்மி பீஸா மாறிய கமல்! உலக நாயகனுக்கே இந்த நிலைமையா? இத செய்ய மறந்துட்டாங்களே

Kalki: பிரபாஸ், அமிதாபச்சன், கமல், தீபிகா படுகோனே போன்ற பெரிய பெரிய நடிகர்கள் நடித்து வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. ஒரு ஹாலிவுட் தரத்தில் இந்த படத்தின் டிரைலர் இருந்தது அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் மீண்டும் இந்த படத்தில் தான் யார் என்பதை நிரூபிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சூப்பர் மேன் ஆக இந்தப் படத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுவும் இந்த படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களும் பிற மொழிகளில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர்கள் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இதையும் படிங்க: கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!.. காசு எல்லாம் போச்சி!.. புலம்பும் நடிகர்!..

600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வருகிற 27ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கின்றது. ட்ரைலர் வெளியாகி 14 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே இது தனித்துவமான ஒன்று என பல youtube பயனாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கல்கி படத்தில் கமல் நடித்திருந்தும் தமிழில் புஷ்பா 2 படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு கல்கி படத்திற்கு இல்லை என ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் ஒரு கேள்வியை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘கல்கி திரைப்படத்தின் விளம்பரத்தில் பிரபாஸுக்கும் அமிதாப்பச்சனுக்கும் கொடுக்கிற முக்கியத்துவம் கமலுக்கு கொடுத்த மாதிரி தெரியவில்லை.

இதையும் படிங்க: கடையை மூடும் லைகா!.. புது கம்பெனியை தேடி ஓடும் விஜய் மகன்!.. பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!..

இது கூட அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் அந்தப் படத்திற்கான தெலுங்கு விளம்பரங்களில் பிரபாஸுக்கும் தமிழ் விளம்பரங்களில் கமலஹாசனுக்கும் ஹிந்தி விளம்பரங்களில் அமிதாப்பச்சனுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்’ என்ற முறையை அவர்கள் செயல்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

 

Related Articles

Next Story