More
Categories: Cinema News latest news

அயலானுக்கு பேட்டி வேணுமா? அப்போ இந்த கண்டிஷன் கன்பார்ம்.. சிவகார்த்திகேயனின் தில்லாலங்கடி!

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் புரோமோஷனுக்கு அவர் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். ஆனால் ஒரு பேட்டியில் கூட மக்கள் நினைத்த விஷயத்தின் கேள்வி வரவே இல்லையே என பலர் குழப்பத்தில் இருந்து இருப்பார்கள். தற்போது அதன் விடை வெளியாகி இருக்கிறது. 

விஜய் தொலைக்காட்சியில் இருந்து நடிக்க வந்தவர் சிவகார்த்திகேயன். ஆனால் அவர் உயரம் எக்கசக்கமாக வளர்ந்தது. இன்றைய முன்னணி ஹீரோ லிஸ்ட்டில் அவர் பெயரும் வைக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவரின் எல்லா படங்களும் ஹிட் கொடுத்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தினை தவிர மற்ற படங்களுக்கு பெரிய அளவிலான வசூல் இல்லை. இதை தொடர்ந்து வரும் பொங்கல் தினத்தில் அவர் நடிப்பில் அயலான் என்னும் வேற்றுகிரகவாசி திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு இந்த கதை புதிது என்பதால் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என சிவகார்த்திகேயன் நம்பி வருகிறார்.

சமீபத்தில் இதன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களை அழைத்து நடத்தப்பட்டது. அப்போதே மேடையில் சிவகார்த்திகேயன் தன் மீது இருக்கும் சர்ச்சை குறித்து எதுவும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் நாசுக்காக அந்த பக்கம் கூட எட்டி பார்க்கவில்லை.

தொடர்ந்து பல தளங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் கூட அவருக்கும் இமானுக்குமான பிரச்னை குறித்த கேள்வியே இல்லை. இதுகுறித்து விசாரிக்கும் போது ஏற்கனவே இமான் பிரச்னை வெடித்த போது பல லட்சம் செலவு செய்து மீம்கிரியேட்டர்கள், யூட்யூப்களின் வாயை அடைத்தார். 

இதையும் படிங்க: புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

அதுப்போல இந்த முறை அயலானுக்கு பேட்டி தரேன். ஆனால் இமான் குறித்த எந்த கேள்வியும் இருக்க கூடாது என கண்டிஷன் போட்டு சத்தியம் செய்தால் தன பேட்டியே தராராம். அதனால் தான் சமீபத்தில் சின்னி ஜெயந்த், பரத்வாஜ் ரங்கன் ஆகியோரிடம் பேட்டி கொடுக்கும் போது பாசிட்டிவ் கேள்விகளே இருந்தது.

பெரும்பாலும் சின்ன யூட்யூப் தளங்களுக்கு சிவகார்த்திகேயன் பேட்டி கொடுப்பதை மறுத்தும் விட்டார். இந்த சர்ச்சைக்கு முன்னர் சாதாரண சேனலில் கூப்பிட்டால் கூட நான் வரேன் என உடனே ஓகே சொன்ன சிவா இப்படி ஆகிட்டாரே எனப் பேச்சுகள் எழுந்துள்ளது. 

Published by
Akhilan

Recent Posts