Connect with us
Ithayakani

Cinema History

புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

1975ல் வெளியான படம் இதயக்கனி. மக்கள் திலகம் எம்ஜிஆர், ராதாசலுஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இது மாபெரும் வெற்றிப்படம். அறிஞர் அண்ணா எம்ஜிஆரை என் இதயக்கனி என்று சொன்னார். அதுவே படத்தின் டைட்டில் ஆனது.

எஸ்டேட் முதலாளி ஒரு அனாதைப் பெண்ணைத் திருமணம் செய்கிறார். மனைவி மேல் ஒரு கொலைப் பழி விழும். கடைசியில் எம்ஜிஆர் அந்தப் பழிக்கான காரணத்தைக் கண்டறிகிறார். அதுதான் கதை. அரசியலில் எம்ஜிஆர் மிகவும் வேகம் எடுத்த காலம்.

இதையும் படிங்க… ஒரே படத்தோடு காணாமல் போன நடிகர் இவர் தான்… அப்புறம் என்ன ஆனார் தெரியுமா?

அதனால் தான் இந்தப் படத்தில் நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற பாடல் கூட இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் பிற்காலத்தில் அவரது கொள்கைப் பரப்பும் பாடலாகவே அமைந்துவிட்டது.

படத்திற்கு இசை அமைத்தவர் எம்ஸ்.விஸ்வநாதன். பாடலைப் பாடியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தப் பாடலில் புல்லாங்குழல், சாக்ஸபோன் ஆகிய கருவிகளின் இசை ரொம்பவே சூப்பராக இருக்கும். எம்ஜிஆரை எட்டாவது வள்ளல் என்று பலரும் சொன்ன காலம். சர்க்கரைப் பந்தல் நான்… தேன்மழை சிந்தவா… சந்தன மேடையும் இங்கே.. சாகச நாடகம் எங்கே…? இதுதான் புலமைப்பித்தன்.

இதையும் படிங்க… கலைஞர் நூற்றாண்டு விழாவில் அஜித்? புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த தல

தொடர்ந்து தேனொடு பால்தரும் செவ்விள நீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்… தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும்… என்று அழகாக சரணத்தை எழுதி முடித்திருப்பார் புலமைப்பித்தன்.

அன்றைய காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரைப் பொறுத்தவரை அவருக்குத் தெரியாமல் அவர் நடித்த படத்தில் எந்த ஒரு விஷயமும் நடக்காது. புலமைப்பித்தன் எம்ஜிஆருடன் முரண்பட்டவர். ஆனாலும் அவரது தமிழ்ப்புலமை எம்ஜிஆருக்கு மிகவும் பிடிக்கும். புலமைப்பித்தன் ரொம்பவே குறும்பானவர். முதலில் இன்பமே உந்தன் பேர் ஆண்மையோ என்று தான் எழுதினாராம். எம்ஜிஆருக்கு இந்த வரியில் உடன்பாடில்லை. இந்த ஆண்மைக்குப் பதிலாக வேறு ஒரு சொல்லைக் கேட்டாராம். கடைசியில் வள்ளல் என்ற வார்த்தை போடப்பட்டதாம்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top