சூர்யா படங்களில் நடக்கும் தொடர் பிரச்னைகள்… கோபத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…
Surya: நடிகர் சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் கங்குவா படத்திலும் அதே பிரச்னை நடக்க இருக்கும் நிலையில் சூர்யா ரசிகர்கள் செம கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. அவர் நடிப்பில் சூரறைப் போற்று மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக வெளியான ஜெய் பீம் திரைப்படமும் நல்ல விமர்சனத்தை குறித்த நிலையில் நடிகர் சூர்யா தொடர்ச்சியாக கோலிவுட்டில் எந்த படத்தையும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: ஸ்ருதியிடம் உண்மையை சொன்ன மீனா… பங்ஷனுக்கு வரும் கோபி… திட்டு வாங்கும் தங்கமயில்..
அவர் நடிப்பில் கடைசியாக வெளியானது எதற்கும் துணிந்தவன் திரைப்படம்தான். அதுவும் சுமாரான விமர்சனமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அதுபோல அவர் நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படமும் ரிலீஸை நோக்கி தயாராகி இருக்கிறது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் கங்குவா திரைப்படத்தை அக்டோபர் 10ல் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அதே நாளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸாக காத்திருக்கிறது. இதனால் ஸ்டுடியோ கிரீன் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியிருப்பதாக தகவல்கள் கசிந்தது.
இதையும் படிங்க: சாமி கும்பிட வந்தா இப்படி ஒரு கேள்வியா கேட்பீங்க? நமீதாவுக்கு ஏற்பட்ட அவமானம்
அது மட்டும் அல்லாமல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காலநிலை சரியாக இருக்காது என்பதால் படத்தின் வசூலும் பெரிய அளவில் அடிப்படும். இது சூர்யாவின் மார்க்கெட்டையே கெடுக்கும் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வருகின்றனர். தொடர்ச்சியாக #ShameOnYouStudioGreen என்ற ஹாஸ்டேகையும் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.