Cinema History
ரஜினிக்கே நான்தான் சொல்லி கொடுத்தேன்!..தனுஷ்லாம் யாரு?.. கடுப்பான வடிவேலு!…
தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளில் நடிக்க துவங்கி பின் வைகைப்புயலாக மாறியவர் நடிகர் வடிவேலு. இவரை நடிகர் ராஜ்கிரன் தான் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வடிவேலுவை அறிமும் செய்தார். அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் வடிவேலு.
சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் படம் முழுவதும் விஜயகாந்துக்கு குடை பிடிக்கும் வேடத்தில் நடித்தார். அதன்பின், சிங்காரவேலன் படத்தில் நடித்தபோது அவரின் நடிப்பு கமலுக்கு பிடித்துப்போக, தேவர் மகன் திரைப்படத்தில் ஒரு நல்லகதாபாத்திரம் கொடுத்தார். வடிவேலுவும் அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிவாஜியிடமே பாராட்டு பெற்றார்.
இதையும் படிங்க: இறப்பதற்கு முன்னாடி என்னிடம் இரண்டு சத்தியம் வாங்கிய பாலுமகேந்திரா… சீக்ரெட் பகிர்ந்த மௌனிகா…
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறினார். இவரின் சம்பளம் அதிகரித்து ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் என்கிற அளவுக்கெல்லாம் முன்னேறினார். திரையில் நாம் பார்க்கும் நடிகர் வடிவேலுவின் நிஜ முகமும் பலரும் அறியாதது. அவரை பற்றிய பல உண்மைகளை தெரிந்தால் ‘வடிவேலுவா இப்படி?’ என ரசிகர்களே அதிர்ந்து போவார்கள். ஏன் நம்பவே மாட்டார்கள்.
பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு வடிவேலு குடைச்சல் கொடுப்பார். அவருக்கு பிடிக்காத ஒருவர் படத்தில் நடிக்க வந்தால் அவரை விரட்டிவிட்டுத்தான் இவர் நடிக்கவே துவங்குவார். அதேபோல், அவருக்கு பிடிக்காத ஒருவருக்கு நெருக்கமானவராக இருந்தாலும் அவருடன் நடிக்கமாட்டார். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நடிக்க வேண்டும் எனில் 3 மணி நேரம் மட்டுமே நடிப்பார். இப்படி நிறைய இருக்கிறது.
வடிவேல் இதுவரை ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். ஆனால், தனுஷை தவிர. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஏன் நடிக்கவில்லை என்கிற செய்தியைத்தான் இங்கே கூறப்போகிறோம்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் படிக்காதவன். இப்படத்தில் விவேக் நடித்த காமெடி வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது வடிவேலுதான். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஒரு காட்சியில் இயக்குனர் சுராஜ் கூறியது படி இல்லாமல் வடிவேல் வேறுமாதிரி நடித்துக்கொண்டே இருந்தார். இதனால் அந்த காட்சியை 12 முறை திரும்ப திரும்ப எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடுப்பான தனுஷ் ‘அண்ணே இயக்குனர் சொல்வது போல் நடிங்க’ என வடிவேலுவிடம் கூற, தனுஷை கோபமாக முறைத்துள்ளார் வடிவேலு.
அதன்பின் ‘இவரின் மாமனார் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்தபோது அவருக்கே நான்தான் சொல்லிக்கொடுத்தேன். இவர் எனக்கு நடிப்பது எப்படி என சொல்லி கொடுக்கிறாரா’ என அங்கிருந்தவர்களிடம் சத்தம் போட்டுவிட்டு அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இயக்குனர் எவ்வளவு சமாதானம் பேசியும் வடிவேல் கேட்கவில்லை. எனவே, அவருக்கு பதில் விவேக்கை நடிக்க வைத்தார் சுராஜ். இதே சுராஜ்தான் தற்போது வடிவேலுவை வைத்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது வரை தனுஷும், வடிவேலும் இணைந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.