ஒரு படத்துல நடிச்சதே போதும்! விஜய் தொடர்ந்து வில்லனா நடிக்காததற்கு இவங்கதான் காரணமா?

Published on: June 25, 2024
vijay (4)
---Advertisement---

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். அடுத்ததாக இப்போது அரசியலிலும் தனது பணியை தொடர இருக்கிறார். அதுவும் மார்க்கெட்டில் தனக்கென ஒரு தனி உச்சத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் போதே சினிமா வேண்டாம். அரசியலில் இறங்கப் போகிறேன் என மிகத் துணிச்சலோடு கோடிகளை எல்லாம் விட்டுவிட்டு அரசியலில் இறங்கும் விஜயை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

ஒரு ஹீரோவாக இத்தனை ஆண்டுகள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் விஜய் வில்லனாக நடித்த படம் என்னவென்றால் பிரியமுடன். முழு நேர வில்லனாக அந்த படத்தில் நடித்திருப்பார். வில்லனாகவும் ஹீரோயிசத்தை காட்டி நடித்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த படத்திற்குப் பிறகு விஜய் அந்த மாதிரி ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்காததற்கு காரணம் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகும் ரஜினி, கமலின் ரீல் மகள்.. வருத்தத்தில் இளைஞர்கள்!..

அதாவது பிரியமுடன் படத்திற்கு பிறகு அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விஜய் அதில் ஒருவர் வில்லனாக நடித்திருப்பார். இன்னொருவர் ஹீரோவாக நடித்திருப்பார். ஆனால் பிரியமுடன் படத்தில் காதலிக்காக எதையும் செய்ய துணிந்த ஒரு கதாபாத்திரமாகவும் அதே நேரம் தனது வில்லத்தனத்தை காட்டுபவராகவும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார் விஜய்.

அந்த படத்தில் நடிக்கும் போது அவருடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உடன்பாடே கிடையாதாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவருடைய அம்மா ஷோபாவுக்கு துளி கூட இஷ்டம் இல்லையாம். இருந்தாலும் விஜய் எப்படி அந்த படத்தில் நடித்தார் என்பதற்கு அந்த படத்தின் இயக்குனரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஷாருக்கான் வில்லனாக நடித்த பாஷிகர் படத்தை பார்த்த விஜய் அதிலிருந்து அந்த கேரக்டர் பிடித்த போக நாமும் நடிக்கலாம் என துணிந்து வந்தாராம்.

இதையும் படிங்க: ஏவிஎம் நிறுவனம் இப்போ ஏன் படம் தயாரிக்கலன்னு தெரியுமா? கோலிவுட்டையே டாரு டாரா கிழிச்சிட்டாரே..!

பிரியமுடன் படத்தில் நடித்ததற்கு அந்த படமும் ஒரு காரணம் என அப்போது படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறினார். இருந்தாலும் அதன் பிறகு தொடர்ந்து வில்லனாக படங்களின் நடிக்காததற்கு அவருடைய அம்மாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.