விஜய் ஏன் ஒரு வார்த்தை கூட அதைப் பற்றிப் பேசல…? பிரபலம் கேட்பது நியாயம் தான்..! இப்பவாவது கவனிங்க தளபதி..!

Published on: June 11, 2024
Vijay
---Advertisement---

சமீபத்தில் நீட் தேர்வால் நடந்த கொடுமைகளைப் பற்றி அலசும் படமாக அஞ்சாமை வந்தது. இந்தப் படத்தின் இயக்குனர் தைரியமாக அதைச் சொல்லியிருக்கிறார். விதார்த் நடித்த இந்தப் படத்தை சுப்புராமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பற்றியும் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நீட் தேர்வை கடந்து இன்றைய அரசியல்வாதிகள் போக முடியாது. தினமும் அவர்கள் பத்திரிகை படிக்கும் பழக்கம் உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள். நிச்சயமாக இந்த சினிமா பகுதியை யார் கடந்து போனாலும் நீட் என்ற வார்த்தையை யாரும் கடந்து போக முடியாது. விமர்சனம் எழுதிய எல்லாருமே நீட்டுக்கு எதிரான படம் என்று தான் எழுதியிருக்கிறார்கள்.

Anjaamai
Anjaamai

சமீபத்தில் கூட முதல்வர், சீமான் எல்லாருமே நீட் தேர்வு குறித்து பேசி வருகின்றனர். அப்படின்னா இதுவரை வேறு யாருமே இதைப் பற்றி பேசவில்லையே… அந்த வகையில் புத்துணர்ச்சியோடு வரக்கூடிய தளபதி விஜய் காதில் கூட இது விழவில்லையா? அவரது பார்வையில் இருந்து இந்தப் படம் தப்பி விட்டதா? ஏன் இந்தப் படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மேடைக்கு மேடை முழங்குவது, மணிக்கணக்கில் பேசுவது, பக்கம் பக்கமாக அறிக்கை விடுவது என எல்லாவற்றையும் தாண்டி சொல்வது ஒரு திரைப்படம். பல சம்பவங்கள் அதில் காட்டப்படுகிறது. அனிதாவின் மரணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. படத்தில் ஒரு டயலாக் வரும். ‘கண்ணுல ஏன்யா டார்ச் அடிச்சிப் பார்க்குறீங்க?’ன்னு வரும்.

இதையும் படிங்க… லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்ட சத்தியராஜ்!.. விக்ரமுல விட்டதை கூலில பிடிச்சிட்டார்!..

அதாவது விடைகள் தெரிய கண்ணுல ஒரு டெக்னாலஜி வைத்து இருப்பார்களாம். அதற்கு வாதாடுகிற வழக்கறிஞர் சொல்வார். ‘மெட்ரோ ரயில் வந்து 100 வருஷம் ஆயிடுச்சு. நமக்கு வர 100 வருஷமாச்சு. இப்படிப்பட்ட டெக்னாலஜியை சாதாரண குடும்பத்துல இருந்து வர்ற பசங்க எப்படியா வச்சிருக்க முடியும்? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு வேணாமா…’ன்னு கேட்பார்.

இப்படி நீட் தேர்வின் அவலங்களைத் தத்ரூபமாக பேசுகிறது. இந்தப் படம் இன்றைய காலகட்டத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்னு விஜய் எக்ஸ் தளத்தில் போட்டால் போதும். நிறைய பேரோட மத்தியில ஒரு விழிப்புணர்வு வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.