More
Read more!
Categories: Cinema News latest news

சம்பளம் அதிகமா வாங்கிட்டா நீங்க சூப்பர்ஸ்டாரா? அவர் இடத்துக்கு நீங்க வர முடியாது.. தளபதியை வறுத்தெடுத்த பிரபலம்

அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற பிரச்னை தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. ஒவ்வொரு பேட்டியிலும் எல்லா பிரபலங்களிடமுமே யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜயை மறைமுக ரஜினிகாந்த் தன்னுடைய ஜெய்லர் படத்தில் விமர்சித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஆடியோ ரிலீஸில் கூட ரஜினிகாந்த் விஜயை காக்கா எனக் கூறியதை கூட சமூக வலைத்தளம் மிகப்பெரிய சர்ச்சையாக்கி இருக்கிறது. இந்த வகையில் இந்த பிரச்னை குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் பேசி இருக்கிறார். அதில் விஜயை மிகப்பெரிய அளவில் வறுத்தெடுத்து இருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஜெயிலர் பார்த்துட்டு கண் கலங்கிய கன்னட சூப்பர்ஸ்டார்!.. அந்த அளவுக்கு என்ன நடந்தது தெரியுமா?..

நடிகர் மீசை ராஜேந்திரன் அளித்த சமீபத்திய பேட்டியில் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இதுக்கெல்லாம் கேள்வியே இல்லை. அடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினி சார் தான். விஜய் சார் இளையதளபதி மட்டும் தான். அவர் ஏற்கனவே தளபதி என ஒரு மிகப்பெரிய பிரபலம் இருக்கும் போது அந்த பட்டத்தினை எடுத்ததே தப்பு தான்.

தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு வருவதற்கே ரஜினியின் அண்ணாமலை டயலாக்கை சொல்லி தான் அப்பாவிடம் நடிக்க ஓகே வாங்கினார். ஆனால் இப்போது அவருக்கே போட்டி என நினைத்து கொண்டு இருக்கிறார். அதிக சம்பளம் வாங்கினால் நீங்க சூப்பர்ஸ்டாரா?

இதையும் படிங்க: ரஜினி அவங்க மேலலாம் காண்டு.. அதுக்குதான் இந்த வசூல் வடை.. கம்பு சுத்தும் புளூசட்டமாறன்..

விஜய் தன்னுடைய விஷ்ணு பட சமயத்தில் ரஜினிகாந்தின் கார் கதவினை திறந்து விட்டதை நான் பார்த்து இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலவி வந்தால் கூட விஜய் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி தான் மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும். அவர் 160க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நீங்கள் 60க்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

அவர் உங்களுக்கு சீனியர். அவரை தலைவர் என்று இப்போது ஓபனாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் இந்த பிரச்னை முற்றுப்புள்ளி வைத்து விடலாம் தானே என வறுத்தெடுத்து இருக்கிறார். இந்த பேட்டி தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Published by
Akhilan

Recent Posts