Bakkiyaraaj: தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் அதே சமயத்தில் நடிகராகவும் தன்னுடைய இடத்தினை தக்க வைத்து கொண்டவர் பாக்கியராஜ். அவரின் ஹிட் லிஸ்ட் படங்களில் முக்கியமான படமாக பார்க்கப்படுவது அந்த ஏழு நாட்கள். அதில் நடந்த சுவாரஸ்ய தகவல்கள் பற்றி இங்கே பார்ப்போம்.
ஒரு தீபாவளி தினத்தில் ரஜினி, கமல் படங்களுடன் ரிலீஸ் செய்யப்பட்டது தான் அந்த ஏழு நாட்கள். அவரே நடித்து இயக்கிய இப்படத்தில் அம்பிகா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
இதையும் படிங்க: உடைந்த மனநிலையில் முடங்கி கிடக்கும் சிவகார்த்திகேயன்!.. ஓவரா ஆட்டம் போட்டா இப்படித்தான்!..
ஆனால் இப்படத்தின் தொடக்கத்தில் ராஜேஷ் கேரக்டருக்கு முதலில் பாக்கியராஜ் கேட்டது சிவக்குமாரை தானாம். ஆனால் அவர் ‘என்ன இது வெறும் ஏழு காட்சிகள் தான் இருக்கு. இதில் நான் எப்படி நடிப்பது என முடியாது’ எனக் கூறிவிட்டாராம்.
அதை தொடர்ந்து கன்னி பருவத்திலே படத்தினை முடித்து விட்டு வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த ராஜேஷை ஓகே செய்து இருந்தார். ஆனால் அதற்கும் அவர் மனைவி ப்ரவீணா இவருக்கு இந்த கதாபாத்திரம் செட்டாகாதே என சந்தேகமாக கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: என்னங்க ஜிகர்தாண்டா டபுள் எக்ஸில் ரஜினி, கமலா..! கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஆச்சரிய ட்வீட்..!
ஆனால் பாக்யராஜ் ராஜேஷுக்கு கோட், சூட் போட்டுவிட்டால் டாக்டராகவே மாறிவிடுவார் என்றாராம். அதனை தொடர்ந்து ராஜேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம். கடைசியில் ராஜேஷ் பாக்கியராஜுக்கே ஒரு சீனை இயக்கி கொடுத்தாராம்.
அது பாக்கியராஜுக்கு முதலில் பிடிக்காமல் இருந்தது. ஆனால் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பின்னணி இசை அந்த காட்சிக்கு கோர்க்கும்போது தான் ராஜேஷ் செய்ததற்கு நன்றி கூறும் நிலைக்கே சென்றாராம். இந்த படம்தான் ராஜேஷின் சினிமா வாழ்க்கையையே மாற்றியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…