ரெட்ரோ 1000 கோடி வசூல் செய்யுமா? இன்னுமா இப்படி அடிச்சி விடுவிங்க..?

retro
Retro: ரெட்ரோ படம் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்தப் படம் இதுவரைக்கும் இல்லாத மிகப்பெரிய வசூலை சூர்யாவுக்குக் கொடுக்கும்னு சொல்றாங்களே… அது உண்மையா என பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அது எப்படி? இந்த ஜோசியத்தை சொன்னது யாருன்னு தெரியல. அவங்க எல்லாம் பார்த்தீங்கன்னா நடிகர்களை அண்டிப் பிழைப்பவர்கள். அதனால ஒவ்வொரு நடிகனுடைய படம் வரும்போதும் இந்த மாதிரி 1000 கோடி வசூல் பண்ணும். 500 கோடி வசூல் பண்ணும்னு ஒரு 10 யூடியூப் சேனல்ல பேசுவாங்க.
அவங்க அதோடு நிக்க மாட்டாங்க. அந்த வீடியோ லிங்கை அந்த நடிகருக்கே அனுப்பி இந்தப் பார்த்தீங்களா, உங்களைப் பத்தி நான் பேசிருக்கேன்னு அவங்க குட்புக்ல இடம்பிடிச்சிடுவாங்க. நாளைக்கு பின்ன நமக்கு டேட் தர மாட்டாங்களான்னு முயற்சி எடுப்பாங்க. அதனால இந்த மாதிரியான ஆரூடக்காரர்கள் சொல்வதை எல்லாம் நம்ப முடியாது. சூர்யா சொன்னாரா?
என் படம் 1000 கோடி வசூல் பண்ணும். 5000கோடி வசூல் பண்ணும். அப்படிங்கற நம்பிக்கை யாருக்கு ஏற்படும்னா அந்தப் படத்துல பணியாற்றியவர்களுக்குத்தான். சூர்யா இருக்காருன்னா, நான் இவ்ளோ படத்துல ஒர்க் பண்ணிருக்கேன். எல்லா படத்தையும்விட இந்தப் படத்துலதான் அந்தளவு காட்சிகள் இருக்கு. எனக்கு நம்பிக்கையும் இருக்கு. அந்தளவுக்கு விஷயம் இருக்கு.

நிச்சயமா இந்தப் படம் இவ்ளோ கோடி ரூபாய் வசூல் பண்ணும். அப்படிங்கற நம்பிக்கை சூர்யாவுக்கு ஏற்பட்டு அவரு சொன்னா நாம அதைப் பத்திப் பேசலாம். கார்த்திக் சுப்புராஜ் நான் நிறைய படத்தைப் பண்ணிருக்கேன். ரஜினியை வச்சிப் பண்ணிருக்கேன். அந்தப் படத்துல இல்லாதது இதுல இருக்கு. அப்படின்னு அவர் நம்பிக்கையோடு சொன்னா அதை எடுத்துக்கலாம். ஏன்னா அவர் ஒர்க் பண்ணிருக்காரு.
அதிலும் நம்பிக்கையோடு சொல்றாரு. சம்பந்தப்பட்டவங்க சொன்னா அதுல அர்த்தம் இருக்கு. யாரோ ரோட்ல போறவங்க சொன்னா அதை நாம எப்படி ஏத்துக்க முடியும்? 1000 கோடி, 5000 கோடி வசூல் செய்தால் நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. தமிழ்சினிமாவுக்கு, தமிழ் மக்களுக்குப் பெருமை. அதுல மாற்றமே இல்லை. ஆனா என்னன்னா அந்தப் பெருமையை அடைவதற்கான கன்டன்ட்டோடு அந்தப் படம் இருக்கணும். ஆனா நம்;ம தமிழ்சினிமா அப்படி வருதாங்கறதுதான் மிகப்பெரிய கேள்வி என்கிறார் பிஸ்மி.
இதுக்கு தமிழ்சினிமாவின் வியாபாரம் தெரிந்திருக்க வேண்டும்? தமிழகத்தில் எத்தனை தியேட்டர்கள்ல வெளியாகும்? எவ்வளவு ஷேர்? கிராஸ் கலெக்ஷன் எவ்வளவு? ஷேர் எவ்வளவு? தியேட்டரிகல் ரெவினியு, நான் தியேட்டரிகல் ரெவினியுன்னு எல்லாம் தெரிஞ்சாதான் இதெல்லாம் பேசவே முடியும். அப்படி தெரிஞ்சவங்க 1000 கோடி வசூல் ஆகும்னு பேசவே மாட்டாங்க.
ரொம்ப பெரிய அளவில் வெற்றி அடைந்த படம்தான் 1000 கோடியை நோக்கி நகரவே முடியும். இது ஒண்ணுமே தெரியாம 1000 கோடி வசூல் ஆகும்னு சொல்றது எல்லாம் தன்னைத்தானே ஏமாற்றுவதோடு, மக்களையும் ஏமாற்றுவதுக்குச் சமம் என்கிறார் பிஸ்மி.