Connect with us
rajini

Cinema News

ஒரு வாய் சோத்துக்கு பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் ரசிகர்கள்! ஆனால் தடபுடலாக நடந்த ‘ஜெய்லர்’ விருந்து

Actor Rajini: ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெய்லர் திரைப்படம் மாபெரும் வெற்றியை  பெற்றி வசூலிலும் பெரும் சாதனையை படைத்தது. கிட்டத்தட்ட 700 கோடியை தாண்டி தமிழ் சினிமாவிற்கே ஒரு பெருமை சேர்த்த திரைப்படமாக ஜெய்லர் விளங்கியது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் இயக்கிய ஜெய்லர் திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு வித்திட்டது.

இன்று வரை ஜெய்லர் திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த கொண்டாட்டத்தின் எதிரொலியாகத்தான் சன்பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் என மூன்று பேருக்கும் விலையுயர்ந்த சொகுசு கார்களை அன்பளிப்பாக வழங்கினார். அதுமட்டுமில்லாமல் படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் ஒரு பவுன் தங்க  நாணயத்தையும் பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க: விஜயிற்கு விருப்பமே இல்லாமல் நடித்த படம்… ஒரே நாளில் மாஸ் ஹிட்டாக்கிய எஸ்.ஏ.சி

இதோடு தட புடலாக கறி விருந்தும் கொடுக்கப்பட்டது. ஒரு பக்கம் ஜெய்லர் படத்தில் பணியாற்றிய குறிப்பிட்ட கலைஞர்கள் மட்டும் ஒரு சிறியதாக பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள். அதில் ரஜினியுன் கலந்து கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் தனது மகள் சௌந்தர்யா திருமணத்தின் போதே தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பதாக ரஜினி தெரிவித்திருந்தார். மேலும் அவரின் அரசியல் பிரவேசம் சூடுபிடித்த போது கூட ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு கூட்டத்தை கூட்டி அனைவர் முன்னிலையில் உங்களுக்கு கறிவிருந்து கொடுக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் ராகவேந்திரா மண்டபம் என்பதால் சைவம் தான் முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு நாள் தனது அனைத்து ரசிகர்களுக்கு கறிவிருந்து கொடுக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: கமலுடன் முடிஞ்சு போச்சுனு நினைச்சேன்! ‘ரஜினி171’க்கு இப்பவே அடித்தளம் போட்ட நடிகை – எடுபடுமா?

ஆனால் அதை இன்று வரை ரஜினி நிறைவேற்றவில்லை. சில ரசிகர்கள் ரஜினியின் சார்பில் அவர்களாகவே விருந்து கொடுத்து  மகிழ்ந்தனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இன்னும் அதை குறிப்பிட்டு ரஜினி எப்போது அந்த விருந்தை கொடுக்கப் போகிறார் என்று ஒரு நிகழ்ச்சியில் தனது கேள்வியாக பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் உங்கள் கேள்வியை ரஜினியிடன் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்து விடுகிறேன் என்றும் கூடிய சீக்கிரம் ரஜினி அதை செய்வார் என்றும் சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: மகனுக்காக பல ஹீரோக்களின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ.சி… அம்புட்டு பாசமோ!

google news
Continue Reading

More in Cinema News

To Top