ஓவர்சீஸ்ல மாஸ் காட்டும் ரெட்ரோ… சூர்யாவுக்கு கம்பேக் உறுதி!

retro movie 1
Retro: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுக்குக் கம்பேக் கொடுக்குமா? கங்குவா படம் ஏமாற்றிய சூழலில் இது கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சூர்யா உள்ளார். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
ரெட்ரோ படத்துக்கு ஓவர்சீஸ்ல பெரிய அளவில் டிக்கெட் புக்கிங் இருக்கு. ஆனாலும் தமிழ்நாட்டுல அந்தளவுக்கு இல்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்ல கூட ஓரளவுக்கு இருக்கு. சிங்கிள் ஸ்க்ரீன்ல இல்ல. என்ன காரணம்னா கங்குவா படத்துக்கு ஓவரா ஹைப் கொடுத்தாங்க. ஆனா படம் பெரிய அளவில் ரீச்சாகல. அதனால தியேட்டர்காரங்க ரீபண்டு கேட்டாங்களாம். அந்தப் பிரச்சனை ஓடிக்கிட்டே இருக்குறதால தான் பல தியேட்டர்கள்ல ஆன்லைன் புக்கிங்கே இன்னும் ஆரம்பிக்காம இருக்கு.

கங்குவா படத்தோட தோல்வியால ரெட்ரோவுக்கு பெரிய எழுச்சி இல்லை. படம் வரட்டும் பார்த்துக்கலாம்னுதான் ரசிகர்கள் எல்லாரும் இருக்காங்க. ரெட்ரோ பட புரொமோஷனை வச்சி கம்பேக்கை சொல்ல முடியாது. சூர்யாவும் வீரதீரசூரன் படத்துக்கு விக்ரம் புரொமோஷனுக்குப் போன மாதிரி ஒவ்வொரு இடமா போய்க்கிட்டு இருக்காரு.
சூர்யாவுக்கு கடந்த சில வருஷங்களாக வெற்றியே வரல. அந்த வகையில ரெட்ரோ படம் கம்பேக்கா இருந்தா சந்தோஷம்தான். ஆனா இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தல. டைட்டிலே பெரிய அளவில் ரீச்சாகல. இதைத்தாண்டி இந்தப் படம் வெற்றி அடைந்து சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்தா அது நமக்கு மகிழ்ச்சி தான் என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.
90ஸ் காலகட்டத்தில் நடக்குற கதை மாதிரி ரெட்ரோ இருக்கு. காலகட்டம் பிரச்சனை அல்ல. அதுக்குள்ள கார்த்திக் சுப்புராஜ் என்ன பண்றாருங்கறதுலதான் இருக்கு. சூர்யா மாதிரியான நடிகர் 5 பிளாப் கொடுத்தாலும் அவரால நல்ல படம் கொடுக்க முடியும். அப்படிங்கற மைன்ட் செட்டுக்கு ஆடியன்ஸ் வருவாங்க. அதனால இந்தப் படமும் நல்ல ஓபனிங்கைக் கொடுக்கும். அந்தப் படத்தோட கன்டன்ட் அடிப்படையில தான் படத்துக்கு வரவேற்பு இருக்கும் என்கிறார் பிஸ்மி.