Categories: latest news

தீபாவளி ரேஸில் விடாமுயற்சி? தயாரிப்பாளர் போட்ட பதிவு.. கலக்கத்தில் மற்ற படங்கள்

Vidamuyarchi Movie: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் விடா முயற்சி. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் இப்பொழுது முடிந்து பேட்ச் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. படம் எப்படியும் தீபாவளி ரிலீஸ் என்று எதிர்பார்த்த நிலையில் இன்னும் படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதால் கண்டிப்பாக தீபாவளி ரிலீஸ் ஆகாது என்ற ஒரு தகவல் கூறப்பட்டது .

ஆனால் நடிகரும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான ஆர் கே சுரேஷ் அவருடைய இணையதள பக்கத்தில் விடாமுயற்சி படத்தின் போஸ்டரை பகிர்ந்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறியிருக்கிறார். இது ஒரு கலக்கத்தை மற்ற படங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: ஆமாம்.. மனைவி ஆர்த்தியை பிரிகிறேன்!.. ஒருவழியாக வாய் திறந்த ஜெயம் ரவி…

ஏனெனில் தீபாவளி அன்று ஏற்கனவே மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன. சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன், ஜெயம் ரவி நடிக்கும் அண்ணன் மற்றும் கவின் நடிக்கும் குருதி பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்கள். அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருப்பதால் படத்தின் மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பெரும்பாலும் விஜய் அஜித் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் அந்த தேதியில் மற்ற படங்கள் ரிலீஸ் ஆவது கிடையாது. ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் வரும் ஆனால் வராது என்பதைப் போல ஒரு உறுதியில்லாத நிலைப்பாடாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: 10 ஆயிரம் தியேட்டரில் வெளியான ஜவான் வசூலையே முறியடித்ததா கோட்? உருட்டலாம் அதுக்குனு?

ஆனால் ஆர் கே சுரேஷ் போட்ட திடீர் பதிவால் ஒரு வேளை தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி விடுமோ என்ற ஒரு பயமும் அந்த திரைப்படங்களுக்கு இருக்கின்றது. ஏனெனில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக விடாமுயற்சி திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்த வண்ணம் இருக்கின்றன.

அதனால் அந்தப் படத்தோடு இந்த படங்கள் மோதினால் வசூல் ரீதியாக இந்த படங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஒருவேளை விடாம முயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்தால் இந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஜெயிலர் கதைதான் கோட்! யாரெல்லாம் இத கவனிச்சீங்க.. பெரிய குண்டை தூக்கிப் போட்ட இயக்குனர்

விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா அர்ஜுன் ரெஜினா மற்றும் ஆரவ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். படத்தில் அஜித் பல வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் வகையில் விரைவில் அந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Rohini

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

13 hours ago