கிசுகிசுவா?! நோ நோ... நாங்கள்லாம் ரொம்ப நல்ல பசங்க!... கெத்து காட்டும் நடிகர்கள்..
தமிழ்த்திரையுலகில் கிசுகிசு வந்தால் அந்த நடிகர்கள் பிரபலம் என்று அர்த்தம். அதே போல தான் நடிகைகள். ஆனால் சிலர் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் அதே நேரம் ரொமாண்டிக்காகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் யார் யார் என பார்க்கலாமா...
மாதவன்
சாக்லேட் பாய் என்று இவரை செல்லமாக அழைப்பர். அலைபாயுதே, என்னவளே, மின்னலே, டும் டும் டும், ரன் என இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட். அலைபாயுதே படத்தில் இவர் காதல் ப்ரபோஸ் பண்ணும் விதமே சூப்பராக இருக்கும். அது காதலிக்கும் பல இளைஞர்களுக்கு ஒரு கைடாகவே இருந்தது. ஆனாலும் இவர் மீது எந்த கிசுகிசுவும் வரவில்லை.
ஷாம்
கண்ணாலே பேசி கவரும் ஹீரோக்களில் இவரும் ஒருவர். 12 பி படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் இயற்கை படத்தில் மாஸ் காட்டினார். இவருக்கு ரீ என்ட்ரியாக வாரிசு அமைந்தது. ஆனாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாராம்.
வினித்
இவர் ஆவாரம்பூ படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் இவரது பெயர் சக்கரை. வெகுளியான நடிப்பில் பட்டையைக் கிளப்பினார். தொடர்ந்து ஜென்டில்மேன், ஜாதிமல்லி, மே மாதம், சக்தி படங்களில் பிரபலமானார். காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி போன்ற படங்களில் துணைநடிகர். இவர் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர்.
அருண்விஜய்
கன்னத்தில் குழிவிழும் நடிகர் பிரபு. அடுத்து இவர் தான். இவர் ஒரு ஹேண்ட்சம் ஹீரோ. இவர் நடித்ததில் பெரும்பாலானவை காதல் படங்கள் தான். இன்று வரை கிசுகிசுவில் சிக்காதவர். வளரத் துடிக்கும் ஹீரோவாக இன்று வரை இருந்து வருகிறார்.
அரவிந்த் சாமி
தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி அப்ளாஸ் அள்ளும் நடிகர் இவர். ஆரம்பத்தில் ஹேண்ட்சம் லுக்குடன் ஹீரோவாக வந்தார். சமீபத்தில் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார். ஆனாலும் ஹேண்ட்சம் தான்.