More
Categories: Cinema News latest news

ஜெயலலிதா வாழ்க்கையில் யார் யாரோ வந்தார்கள்! பிரிய காரணம் இதுதான்.. தோழி கூறிய ரகசியம்..

Actress Jayalalitha: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக இருந்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. கன்னட திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயலலிதா வெண்ணிறாடை என்ற படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நாட்டியத்தில் கைதேர்ந்த ஜெயலலிதா பன்முக திறமைகள் கொண்ட ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்து வந்தார். மிகவும் தைரியமானவர். ஸ்லீவ்லெஸ்,மாடர்ன் டிரஸ் போன்ற ஆடைகளை அணிந்ததன் மூலம் முதன் முதலில் மேல்நாட்டு ஆடைகளை அணிந்த முதல் நடிகையாக பார்க்கப்பட்டார் ஜெயலலிதா.

இதையும் படிங்க: கிணத்துக்குள் விழுந்த தவளையா தத்தளிக்கும் விஜய்சேதுபதி! அவருடைய 50வது படத்துக்கு வந்த சோதனை

கான்வென்டில் படித்த ஜெயலலிதா நன்கு ஆங்கிலப் புலமை பெற்றவராக திகழ்ந்தார். புத்தகங்கள் படிப்பது, நாவல், சிறுகதை போன்றவைகளை படிப்பது என ஒரு முற்போக்கு வாதியாகவே வலம் வந்தார். எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை என்ற பெருமைக்குரிய நடிகையாக ஜெயலலிதா அறியப்பட்டார்.

இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் ஆன சிவசங்கரி ஜெயலலிதாவை பற்றி சில தகவல்களை பகிருந்தார். ஜெயலலிதாவும் சிவசங்கரியும் நல்ல நெருக்கமான தோழிகளாம். ஏகப்பட்ட கதைகளை எழுதியுள்ள சிவசங்கரி ஜெயலலிதாவை 9 வயதிலிருந்தே நன்கு அறிந்த ஒரு தோழியாகவே இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமானின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. தோட்டக்காரரிடம் கண்டிஷன் போட்ட இசைப்புயல்!..

ஜெயலலிதா நன்கு தைரியமானவர். கரிஷ்மா உள்ளவர். எந்த பிரச்சனையையும் சாதாரணமாக எதிர்கொள்பவர் எனக்கூறிய சிவசங்கரி 83 ஆம் ஆண்டுக்கு அப்புறம் அவரை நான் சந்திக்கவே இல்லை என கூறினார். ஏனெனில் அதற்கு பிறகு ஜெயலலிதா வாழ்க்கையில் யார் யாரோ வந்தார்கள். அதன் பிறகு நாம் உள்ளே செல்வது அவ்வளவு நல்லதாக இருக்காது என கருதியே நான் விலகி விட்டேன் என சிவசங்கரி கூறினார்.

மேலும் ஜெயலலிதாவை பற்றி எல்லா ரகசியங்களும் எனக்கு தெரியும் என்றும் குடும்ப வாழ்க்கைக்குள் போக வேண்டும் என ஜெயலலிதா விரும்பியதாகவும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியதாகவும் ஜெயலலிதாவை பற்றி சங்கரி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினிக்காக தொடர்ந்து அஜித்தை காலி செய்யும் லைகா… மீண்டும் தள்ளிப்போன விடாமுயற்சி?

Published by
Rohini