More
Categories: Cinema History Cinema News latest news

வரலாற்றை திருப்பி பாருங்க… கமல் கூட ஒரு இயக்குனர் ஒரு தடவ தான் பயணிக்க முடியும்.! ஏன் தெரியுமா.?!

நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், பல்வேறு ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தெரிய வரும். அதாவது அவருடன் பணியாற்றிய பல்வேறு ஜாம்பவான் இயக்குனர்கள் அவருடன் ஒரு முறை மட்டுமே பணியாற்றி இருப்பர். இது பெரும்பாலான கமல் திரைப்படங்களில் நடந்திருக்கும்.

Advertising
Advertising

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நடிகர் கமல்ஹாசன் எப்போது கதை, திரைக்கதை ஆசிரியர் கமல்ஹாசனாக உருவெடுத்தாரோ அப்போதே இந்த விஷயங்கள் தொடர்ந்து நடக்க தொடங்கிவிட்டன.

இது மணிரத்னம், ஷங்கர் (இன்னும் இந்தியன்2 தயாராகவில்லை), பரதன் (தேவர் மகன்) , கௌதம் வாசுதேவ் மேனன், சுந்தர்.சி போன்ற இயக்குனர்கள் இவருடன் ஒரு முறை மட்டுமே பயணத்திருப்பர்.

ஆனால், அவர்கள் மற்ற நடிகர்களுடன் இரண்டு, மூன்று முறை பயணித்து இருப்பர். அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து சில சினிமா விமர்சகர்கள் என்ன கூறுவார் என்றால், கமல்ஹாசனுக்கு சினிமாவில் அனைத்தும் தெரியும். கிட்டத்தட்ட சினிமாவில் அவர் ஒரு என்சைக்ளோபீடியா எனுமளவிற்கு சினிமாவிலேயே ஊறிக்கிடந்தவர்.

அவரை எளிதில் கன்வின்ஸ் செய்ய முடியாது. ஒப்புக்கொள்ள வைக்க முடியாது. இந்த காட்சியை இப்படி எடுக்க வேண்டும் என இயக்குனர் கூறினால், அதில் பெரும்பாலும் கமல் தலையீடு இருக்குமாம். அது பிரபலமாக இருக்கும் இயக்குனர்களுக்கு ஒருவித ஈடுபாடு இருக்காதாம். அந்த இயக்குனர்கள் எப்போதுமே இந்த இயக்குனருடைய படமாகத்தான் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதில் ஹீரோ தலையிடக் கூடாது எனவும் நினைப்பார்கள். ஆனால், அது கமல் விஷயத்தில் நடக்காதாம்.

அதனால் தான் கமல் எப்பவும் தான் கதை திரைக்கதை வசனம் எழுதும் படங்களுக்கு, தனது நண்பர்களான சந்தானம் பாரதி, கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் அரவிந்த், சிங்கீதம் சீனிவாசராவ் போன்றவர்களை இயக்குனர்களாக மாற்றிவிடுவார்.

அது சினிமாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் பெயரளவில் மட்டுமே இயக்குனர்களாக இருப்பார்களாம். மற்றபடி படத்தை இயக்குவது, எடிட் செய்வது, என அனைத்திலும் கமலின் தலையீடு இருக்குமாம்.

இதையும் படியுங்களேன் – கொஞ்சம் கூட இரக்கமில்லாத அஜித்.!? அந்த மனுஷன எத்தனை தடவ தான் ஏமாத்துவீங்க.!?

இந்த காரணங்களுக்காகத்தான் கமலுடன் பெரிய இயக்குனர்கள் ஒரு படம் மட்டுமே செய்திருக்கின்றனர். அதன்பிறகு அவரை இயக்குவது மிகவும் கடினம் என அவர்களை வெளியில் சில நேரம் கூறுவதும் உண்டு என்கிறது ஒரு குரூப்.

சினிமாவில் இருக்கும் கதாநாயகர்கள் கதை எப்படி இருக்கிறது, அதில் தங்களுக்கான கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்பது மட்டுமே கூர்ந்து கவனிப்பர். மற்றபடி அதிகபட்சம் பாடல்கள் எப்படி வந்திருக்கிறது என்பது மட்டுமே அவர்களுடைய தலையீடாக இருக்கும். மற்றபடி ஒளிப்பதிவாளர், யார் எப்படி எல்லாம் ஒளிப்பதிவு செய்கிறார்கள். நமது படம் எவ்வாறு உருவாகிறது என்பதில் கதாநாயகர்கள் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள். ஆனால், கமல் விஷயத்தில் இது நடக்காதாம்.

Published by
Manikandan

Recent Posts