இந்த படத்தில் நடிக்காமலே இருந்திருக்கலாம்!.. கமலின் படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்ட நடிகைகள்!..
கமல் தயாரித்து எழுதி இயக்கிய சூப்பர்ஹிட் படம் ஹே ராம். 24 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இன்றும் இந்தப் படம் பேசப்படுகிறது. படம் பெரிய அளவில் கமர்ஷியல் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் கமல் மிகவும் ரசித்து செய்த படம் இது. இந்தப் படத்தைப் பற்றி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
காந்தியை இன்னொரு பரிணாமத்தில் பார்த்த படம் ஹே ராம். இந்தப் படம் இங்கு ஏன் ஓடவில்லை என்று புரியவில்லை. இந்தி பேசும் காட்சிகள் அதிகமாக இருந்தது. அது ரசிகர்களுக்கு எப்படி புரியும் என்பது நெருடலாக இருந்தது. அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழியைத் தான் எடுக்க முடியும். அப்போது தான் ரியலா இருக்கும் என்றார் கமல்.
என்னுடைய காட்சிகள் நிறைய எடுத்தோம். ஆனால் சென்சாரில் அவை கட் ஆகிவிட்டது. ‘டேய் நீ வாயைத் திறந்தே... கத்திரி போட்டுட்டாங்க’ன்னார் கமல் தமாஷாக.
மற்றபடி டெக்னிக்கல், பர்பார்மன்ஸ்லாம் ரொம்ப சிறப்பா இருக்கும். டிரஸ், பேசுற விதம், எடுக்கப்பட்ட இடம் எல்லாமே புதுமையாக இருந்தது. சௌகார் ஜானகி, ஹேமமாலினி நடித்த காட்சிகள் எல்லாமே எடிட்டிங்கில் போய் விட்டது. ஏன்டா இந்தப் படம் பண்ணினோம் என்று வருத்தப்பட்டார்களாம்.
தன்னோட சொந்த வாழ்க்கையில் மனைவியை இழந்த ஒருவன் காந்தியை எப்படி பார்க்கிறான் என்பது தான் கதை. இந்துவையோ, முஸ்லிமையோ உயர்த்தியோ, தாழ்த்தியோ படத்தை எடுக்கவில்லை. நியூட்ரலா எடுத்த படம் தான் அது. அந்தக் காலத்துக்கு அது ரொம்ப அட்வான்ஸா இருந்ததாலோ என்னவோ மக்கள் அதை ஒத்துக்கல. இவ்வாறு அவர் பேசினார்.
ஹேராம் 2000ல் வெளியானது. கமலுடன் ஷாருக்கான், ராணிமுகர்ஜி, வசுந்தரா தாஸ், கிரீஸ் கர்னாட், நசுருதீன் ஷா என பல இந்தி நடிகர்கள் நடித்தனர். இளையராஜா படத்திற்காக சிம்பொனி இசையை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.