கன்னடத்துக்கு பெப்பே காட்டிய யாஷ்… கோலிவுட் பக்கம் திரும்பிட்டாரே! உதறலில் டாப் நடிகர்கள்!
KGF Yash: ஒரு படம் பண்ணாலும் மாஸா பண்ணனும். வசூல் சொலையா 1200 கோடி செய்த படமுனு பல பெருமைகளுக்கு சொந்தகாரர் தான் கே.ஜி.எஃப் படத்தின் யாஷ். ஃபேன் இந்தியா படத்துக்கே தனி சிறப்பை கொடுத்தவர். அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வந்தார்.
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷுக்கு கிடைத்த பொக்கிஷன் தான் கே.ஜி.எஃப். சில வருட இடைவேளையில் இரண்டு பாகங்களாக இந்த படம் ரிலீஸானது. முதல் பாகத்துக்கு பெரிய ப்ரோமோஷன் இல்லை. ஆனால் கூட படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க:எஸ்.ஜே.சூர்யா அரக்கன் தான்… 22 மணி நேரமா செய்வீங்க… ஷாக்கான கோலிவுட்!
இதனால் இரண்டாம் பாகம் எப்போ? எப்போ என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அந்த வகையில், பீஸ்ட் படத்துடன் வெளியான கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் விஜயின் வசூலை தூக்கி சாப்பிட்டது. தியேட்டர் எண்ணிக்கையையும் அதிகரிச்சிட்டே சென்றது. இப்படத்தின் வெற்றி விழா முடிந்துவிட்ட நிலையில் யாஷ் தன்னுடைய அடுத்த படம் குறித்து தெரிவிக்காமலே இருந்தார்.
பிரசாந்த் நீல் கூட பிரபாஸை வைத்து சலார் படத்தினை படப்பிடிப்பை முடித்து விட்டு ரிலீசுக்கே தயாராகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பல நாள் எதிர்பார்ப்புக்கு பின்னர், யாஷ் தற்போது தமிழ் இயக்குனர் ஒருவரை தேர்வு செய்து இருக்கிறாராம். பிரபல இயக்குனர் மித்ரன் தான் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சேர்த்து வச்ச புகழை ஒரே நாளில் காலி செய்த இசைப்புயல் – பரிகாரமாக ரஹ்மான் செய்த மட்டமான செயல்