Connect with us
rahman

Cinema News

சேர்த்து வச்ச புகழை ஒரே நாளில் காலி செய்த இசைப்புயல் – பரிகாரமாக ரஹ்மான் செய்த மட்டமான செயல்

 A.R.Rahman : நேற்று மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக் கச்சேடி. பனையூரில் அமைந்துள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் சுமார் 50000 பேர் அமரக்கூடிய அந்த அரங்கில் கிட்டத்தட்ட 80000 பேர் கூடிவிட்டார்களாம். சுமார் 500 லிருந்து 50000 வரை டிக்கெட்கள் விற்பனையாகியிருக்கின்றது.

ஆனால் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களில் பல பேர் கச்சேரிக்கு செல்ல முடியாமல் வெளியிலேயே தவித்திருக்கின்றனர். ஏதோ ஒரு மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சுமார் 4 கிமீ வரை அந்த ஏரியா முழுவதும் டிராஃபிக்கில் சிக்கியிருக்கின்றது.

இதையும் படிங்க:எஸ்.ஜே.சூர்யா அரக்கன் தான்… 22 மணி நேரமா செய்வீங்க… ஷாக்கான கோலிவுட்!

ஏன் அந்த டிராஃபிக்கில் நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாட்டிக் கொண்டாராம். மேலும் எந்த ஒரு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் வந்தவர்களை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கியது அந்த இசைக் கச்சேரி விழா.

தள்ளு முள்ளுவில் சிக்கி பல பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஒரு சில பேர் நாங்கள் தப்பி வந்ததே பெரிது என அழுது புலம்பியிருக்கின்றனர். ஆனால் இதை பற்றி இந்த கச்சேரி நடத்திய நிறுவனமோ அல்லது ரஹ்மானோ  இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.

இதையும் படிங்க: கமலோட கல்யாணத்துல ரஜினி என்ன வேலை பாத்திருக்கார் பாருங்க!.. வெளியான புகைப்படம்!..

ஒரு மன்னிப்பு கூட ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் போடவில்லையாம். ஆனால் சில மணி நேரத்திற்கு முன்புதான் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாங்கிய டிக்கெட்களை எனக்கு மெயிலில் அனுப்பி விடுங்கள் என்று பதிவிட்டிருக்கிறாராம். ஒரு வேளை நிவாரணமாக எதுவும் கொடுக்க போகிறாரா என்று கூறிவருகிறார்கள்.

ஆனால் அதிலும் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் நேற்று அங்கு ஏற்பட்ட மோதலில் பாதி பேர் தாங்கள் கொண்டு போன டிக்கெட்களை அங்கேயே கிழித்துப் போட்டுவிட்டனர். ஒருவர் தான் வாங்கிய 50000 விலையுள்ள டிக்கெட்டையும் கிழித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மறக்குமா நெஞ்சம் என்ற இசைக்கச்சேரியை மறக்கமுடியாத வகையில் செய்துவிட்ட்டார் ஏஆர் ரஹ்மான்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானை அரெஸ்ட் பண்ணுவாங்களா?.. எல்லாமே திட்டமிட்ட சதி.. ஒரே போடாக போட்ட பிரபலம்!..

எவ்வளவோ இசைக் கச்சேரிகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார் ரஹ்மான். அதுவும் வெளி நாடுகளில் ஏகப்பட்ட கச்சேரிகளை நடத்திய ரஹ்மான் இதை எப்படி தவறவிட்டார் என்று அனைவரும் அனல் தெறிக்க பேசி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top